Latest Updates
-
புதன் தனது சொந்த ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பலாக்கொட்டை இருந்தா இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இந்தியாவின் தேசிய மரம் எது? அது தேசிய மரமானதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
June Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூன் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ட்விஷா சர்மா வழக்கில் அதிர்ச்சி! திருமண வாழ்க்கையில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால் உஷாராக இருங்கள்! -
சப்பாத்திக்கு இந்த ஸ்டைல்-ல முட்டை கிரேவி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் அனைத்து கடவுள்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
போலீஸ் அதிகாரி என நம்பி ஏமாந்த பெண்கள்! டேட்டிங் ஆப் மூலம் நடந்த அதிர்ச்சி AI மோசடி! -
பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப அன்னாசிப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 பழக்கங்கள் உள்ளவர்கள் விரைவில் யாசகம் எடுக்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்
வார ராசிபலன் (24 May 2026-30 May 2026) - மே மாதத்தின் கடைசி வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மே 24 ஆம் தேதி முதல் 2026 மே 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் எதிரிகளை வீழ்த்துவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த வாரத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். புதிய முதலீடுகளை செய்ய நினைத்தால், அதற்கு இந்த வாரம் ஏற்றதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கவலைகள் நீங்கும். பல நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக இந்த வாரத்தில் முடியும். தேவையில்லாமல் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரத்தில் எதிர்மறை எண்ணங்கள் மனதில் வளர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பணத்தை சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் நிலையை வலுப்படுத்த முழு திறமையை வெளிப்படுத்துங்கள். முக்கியமாக எந்த வேலையையும் ஒத்திப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். மன அழுத்தம் குறையும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் இந்த வாரம் கோபத்தை தவிர்க்க வேண்டும். சிறு விஷயங்களுக்காக கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அவசரப்படுவதையும் தவிர்க்க வேண்டும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்து பொறுமையாக எடுக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலைமை மேம்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப எந்த ஒரு வேலையையும் செய்ய முயற்சிக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் உங்களின் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி செயல்படுங்கள். பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வெளிநாட்டுடன் தொடர்புடைய எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளை எழுதுபவர்கள் அல்லது தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த வாரம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் தங்களின் திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உணவுகளில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்க ஒருவரை சந்திப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக கோபத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


