வார ராசிபலன் (18 January 2026-24 January 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்..

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஜனவரி 18 ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 24 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 18 January 2026 To 24 January 2026 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். செவ்வாய் சூரியனின் சேர்க்கையால் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய நண்பர்களை பெறும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். மொத்தத்தில் இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தேவையற்ற செலவுகள் குறையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட கால சட்ட பிரச்சனைகள் தீரும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சற்று மன அழுத்தமாக இருக்கும். உடல் நல பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். வாரத்தின் நடுப்பகுதியில் பங்குச் சந்தை, வர்த்தகத்தின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் வார இறுதியில் கவனமாக இருக்க வேண்டும். கடன் தொல்லையால் சிரமப்படும் வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் நிதி நிலைமை உயரும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில் இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் இருந்து கணிசமான லாபத்தைப் பெறக்கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பங்குச் சந்தை மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலை உயரும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் சற்று சவாலானதாக இருக்கும். குடும்பத்தில் பதட்டம் அதிகரிக்கும். நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால் வார இறுதியில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வெளிநாட்டில் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்க இந்த வார தொடக்கம் சிறந்ததாக இருக்கும். ஆனால் வாரத்தின் நடுப்பகுதியில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, January 17, 2026, 23:00 [IST]
Desktop Bottom Promotion