வார ராசிபலன் (14 December 2025 To 21 December 2025)- இந்த 5 ராசிக்காரங்க கவனமாவும், நிதானமாவும் இருக்கணும்..

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 14 December 2025 To 21 December 2025 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் வேலையால் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். வீட்டு சூழல் நன்றாக இருக்கும். ஆனால் இந்த வாரம் எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எடுக்கும் எந்த முடிவும் நன்மைகளைத் தரும். குழந்தை தொடர்பான கவலை குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். வீட்டிலும், உறவுகளில் பதட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் தங்கள் வணிகத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். அவசரம் இழப்புகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் பொறுமையாக இருந்தால், அனைத்தையும் சமாளிக்கலாம். நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசர முதலீடுகள் இழப்பை ஏற்படுத்தலாம். இந்த வாரம் உடல் சோர்வு அதிகரிக்கும். எனவே ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தினர் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றகரமாக முடிவடையும். முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். வார தொடக்கத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனம் சந்தோஷமாக இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மை பயக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பலனைத் தரும். வாரத்தின் நடுப்பகுதியில் ஆரோக்கியத்திற்காக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயங்களையும் அமைதியாக தீர்க்க முயற்சிக்க வேண்டும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். போட்டிகளில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்தைத் தரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தேர்வு மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இது உங்களின் இலக்குகளை அடைய உதவும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் சாதமாக இருக்கும். பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். போட்டி மற்றும் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குழந்தைகள் சில குழப்பங்களை ஏற்படுத்தலாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தில் சில குழப்பங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தடைகளை சந்தித்தாலும், வெற்றி பெறுவீர்கள். பயணங்களின் போது சற்று எச்சரிக்கை அவசியம். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் கசப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் எதிர்பாராத நிதி ஆதாயங்களும் வாய்ப்புக்களும் கிடைக்கும். ஆனால் வாரத்தின் நடுப்பகுதியில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்திருக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் சொத்து, நிலம், வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பல நல்ல செய்திகளும், லாபமும் கிடைக்கும். ஆனால் வாரத்தில் நடுப்பகுதியில் செலவு சற்று அதிகமாக இருக்கும். பணத்தை சேமிப்பது கடினமாக இருக்கும். தவறான முடிவுகளும், திடீர் செலவுகளும் இழப்புகளுக்கு வழிவகுக்கும். தேர்வு மற்றும் போட்டியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். குழந்தைகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் சச்சரவுகள் ஏற்படவுள்ளது. வாரத்தின் நடுப்பகுதிகளில் வாழ்க்கைத் துணையால் மன அழுத்தம் மற்றும் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமான வாரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன், நோய், எதிரிகள் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் உறவுகளை சிறப்பாக பேண வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தேர்வு மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் மனநிலையில் மாற்றங்கள் மற்றும் உறவுகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகளை தீர்ப்பீர்கள். தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். வார இறுதிக்குள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மேம்படும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் சற்று நிதானமாக செயல்பட வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, December 13, 2025, 21:32 [IST]
Desktop Bottom Promotion