வார ராசிபலன் (05 January To 11 January 2025)- இந்த வாரம் இந்த ராசிக்கார்களுக்கு கொஞ்சம் மோசமா இருக்கும்..

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 டிசம்பர் 05 ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 11 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 05 January 2025 To 11 January 2025 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நடுப்பகுதியில் அதிக செலவுகளை சந்திப்பதால் மனதளவில் கஷ்டப்படுவீர்கள். கண்ணுக்கு தெரியாத பயம் ஆட்டிப்படைக்கும். இந்த வாரத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வணிகர்களுக்கு நன்றாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களின் போது சிரமப்பட வேண்டியிருக்கும். அதிக செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் நன்றாக இருக்காது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரமும் சிறப்பாக இருக்கும். வார நடுவில் எந்த புதிய தொழிலையும் தொடங்க வேண்டாம். வார இறுதியில் நிதி நிலை வலுவடையும். நற்செய்திகளைப் பெறுவீர்கள். சிக்கிய பணம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நிலைமை நன்றாக இருக்காது. வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்காது. சில பிரச்சனைகளில் நீங்கள் சிக்கலாம். மோசமான சூழ்நிலைகளை சந்திக்கலாம். வார நடுப்பகுதியில் அவமானப்படலாம். தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆசைகள் அதிகரிக்கும். இதனால் மனக்குழப்பத்துடன் இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சண்டை ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் வேலையில் ரிஸ்க்கை எடுக்காதீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிரிகளை திறம்பட சமாளிப்பீர்கள். வார தொடக்கத்தில் வேலையில் தடைகளை சந்தித்தாலும், வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் சற்று சிரமமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் மனநிலை மோசமாக இருக்கும். காதலித்து வந்தால் துணையுடன் சண்டை ஏற்படலாம். இந்த வாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சனைகள் அப்படியே இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வாகனங்கள் பழுதடைந்து, பெரிய செலவை வைக்கலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகளை தவிர்க்க வேண்டும். வீட்டு பெரியவர்களின் பரிபூர்ண ஆசியைப் பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். ஆயினும் புதிய வேலைகளைத் தொடங்க வேண்டாம். அன்புக்குரியவர்களுடன் சண்டை ஏற்படலாம். நிலம், வீடு, வாகனம் வாங்குவதில் சிரமம் ஏற்படும். தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். நிதி நிலை வலுவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குடும்பத்தல் உயர்வு ஏற்படும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். மூக்கு, தொண்டை காது ஆகிய பகுதிகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரமும் செழிக்கும். பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலை சிறப்பாக இருக்க தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தொழிலில் வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரக்களே! இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. காதலிப்பவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கும் நன்றாக இருக்காது. குழந்தைகளுடனும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதி இழப்புக்கான சாத்தியம் உள்ளது. முடிவெடுக்கும் போது யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion