Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
வார ராசிபலன் (01 December - 07 December 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க யாரையும் கண்மூடித்தனமா நம்பகூடாது
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 டிசம்பர் 01 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 07 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நிம்மதியான வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு ஆவணத்தையும் படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உற்சாகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலைப்பளு அதிகமாக இருப்பதால், வேலையை முடிப்பதற்காக பணியிடத்தில் அவசரமாக செயல்பட வேண்டியிருக்கும். இதன் விளைவாக ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் மன ஆரோக்கியம் மோசமாக இருக்கும். பணச் செலவுகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வியாபாரிகளுக்கு இந்த வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இந்த வாரத்தில் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் வியாபாரிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். காதலிப்பவர்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். வார தொடக்கத்திலேயே நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். ஆனால் சிறு வாக்குவாதத்தால் சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் நம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். இதனால் பணியிடத்தில் உங்களின் திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உயர் அதிகாரிகளடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வானிலை மாற்றத்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களை ஏற்படாடு செய்யலாம். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கு. பணியிடத்தில் உங்களின் நிலை உயரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலைகளை அவசரமாக செய்து முடிப்படை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்க நேரிடும். எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். நிதி இழப்புக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மங்களரமானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











