Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் வருமானம் உயரும்.. விரும்பிய வேலை கிடைக்கும்..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 22 செப்டம்பர் 2024 முதல் 28 செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இதுவரை உங்கள் வேலையில் நீங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிவடையும். அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எழுதியிருந்தால், அதில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமீபத்தில் அரசு வேலைக்கு தேர்வு எழுதியிருந்தால், முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும். வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரத்தில் விரும்பிய வேலை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் மற்றும் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். அறிவாற்றல் மூலம் உங்களின் தொழிலில் மிகப்பெரிய வெற்றியைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். விரும்பி வேலை கிடைக்காவிட்டால் அல்லது எதிர்பார்த்த வேலை வெற்றிகரமாக முடியாவிட்டால், அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்தால், நிச்சயம் நல்ல பலனைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வேலையில் உடனே வெற்றி கிடைக்காவிட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறன் காரணமாக, பதவி உயர்வைப் பெறலாம். இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலைக்காக நிறைய அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் மூலம் விரும்பிய வேலை கிடைக்கும். வேலைக்காக குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதன் காரணமாக இந்த வாரத்தில் செலவுகள் சற்று அதிகமாகலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் வாழ்க்கையில் சில குழப்பங்களை உணர்வீர்கள். இதனால் வேலை தேடுபவர்கள் எந்த வேலையை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்தால், வெற்றி பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் சிறப்பான நடத்தை உங்களுக்கு பாதகமான சூழ்நிலையில் மிகவும் ஆதரவாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் வெற்றிகள் குவியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவது சற்று கடினம். எந்த ஒரு வேலையையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் கடின உழைப்பால் நிறைந்ததாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெற பொறுமையுடன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து உழைக்க வேண்டும். வெற்றி கிடைக்காவிட்டால் சோர்வடைந்து போகாமல், உங்களால் முடிந்ததை உங்களின் வேலையில் காட்டுங்கள். இதனால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications