Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 13 அக்டோபர் 2024 முதல் 19 அக்டோபர் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். விரும்பிய தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் நடத்தை மற்றும் புத்திசாலித்தனத்தால் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலையில் குழப்பங்களை சந்திப்பீர்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தால், எந்த வேலையை தேர்வு செய்வதென்பது தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் பேச்சில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திப்பீர்கள். மேலும் இது உங்கள் வேலையையும் பாதிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற சற்று நேரம் எடுக்கும். மனம் தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடர்ந்தால், நல்ல வெற்றியைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் குழப்பத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் தொழிலில் வெற்றி பெறுவது சற்று சந்தேகமாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் எதிரிகள் வேலையை கெடுக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக ஏற்ற தாழ்வுகள் நிறைந்தாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைப்பது கடினமாக இருக்கும். இருப்பினும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் குழப்பம் ஏற்படும். எந்த வேலையை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். மனம் சற்று அலைச்சலாக இருக்கும். இந்த சூழ்நிலையில் அனுபவசாலிகளின் உதவியை நாடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய தொழிலைப் பெறுவார்கள். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் தொழிலில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வார இறுதியில் நல்ல வெற்றியைப் பெறலாம். உங்களின் நடத்தை உங்களுக்கு பல நற்பலன்களை அளிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இருப்பினும் கடின உழைப்பு தேவைப்படும். பணிபுரிபவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவதன் மூலம், நல்ல வெற்றியைக் காண்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
