Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது...
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 07 ஜூலை 2024 முதல் 13 ஜூலை 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் தொழிலைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த வாரம் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணமும் உங்கள் மனதில் எழலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றியை பெற சற்று காத்திருக்க வேண்டும். வேலையில் எதிர்பார்த்த பலன் கிடைக்க சற்று நேரம் எடுக்கும். சோர்வைத் தவிர்த்திடுங்கள். உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தி அர்ப்பணிப்புடன் இருங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் சற்று கடின உழைப்பு தேவைப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழிலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளை எழுதியிருந்தால், இந்த வாரத்தில் உங்களுக்கு சாதகமாக முடிவுகள் வரும். வேலை தேடுபவர்களுக்கு அல்லது வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, விரும்பிய வேலை கிடைப்பதற்கான வழிகள் திறக்கப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் வெற்றி கிடைப்பது என்பது கடினம். வெற்றிக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டும். விரும்பிய வேலை முடிய தாமதமாகும். மனம் தளராமல், விரக்தியடையாமல் தொடர்ந்து முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் உங்கள் தொழிலில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில் இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லை. இருப்பினும் வாரத்தின் பிற்பகுதியில் ஒரு சிறப்பான மற்றும் சமூகத்தில் உயர நிலையில் உள்ளவரின் நட்பால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பது மட்டுமின்றி, வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை, இந்த வாரம் அற்புதமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெறுவது என்பது கடினமாக இருக்கும். கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்காது. இதனால் பல தோல்வியை சந்திக்க நேரிடும். இருப்பினும் சோர்வடைந்து போகாமல் தொடர்ந்து கடினமாக உழைத்து வந்தால், எதிர்காலத்தில் பெரிய வெற்றியைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். இருப்பினும் சோர்வடையாமல் கடினமாக உழைத்தால், எதிர்காலத்தில் வேலையில் சிறப்பான வெற்றியைப் பெறுவது உறுதி. மன அழுத்தத்தில் இருந்து விலகி இருந்தால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் பெரிய மருத்துவ செலவை சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். இந்த வாரத்தில் ஒரு சிறப்பான நபரின் நட்பு கிடைப்பதால், பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
