Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
டிசம்பரில் 2 முறை நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சு பணமழை கொட்டப்போகுது...
Venus Transit Will Happen Twice In December 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம்.
இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களால் புத்தாண்டின் தொடக்கம், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதுவும் டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் 2 முறை ராசியை மாற்றவுள்ளார். ஒரே மாதத்தில் இரண்டு முறை சுக்கிரன் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதில் முதலாவதாக டிசம்பர் 02 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் டிசம்பர் 28 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இப்போது சுக்கிரன் டிசம்பரில் 2 முறை ராசியை மாற்றுவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கும்பம்
டிசம்பரில் 2 முறை ராசியை மாற்றும் சுக்கிரனால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலம். பணிபுரிபவர்களின் செயல்திறன் பாராட்டப்படும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், ஆசை நிறைவேறும்.
சிம்மம்
டிசம்பர் மாதத்தில் நிகழும் சுக்கிர பெயர்ச்சிகளால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகின்றன. முக்கியமாக திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்ட நாட்களாக சந்தித்து வந்த உடல்நல பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
டிசம்பரில் நிகழும் சுக்கிர பெயர்ச்சிகளால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் நிறைய லாபமும் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications