Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்களுக்கு குழப்பமும், செலவுகளும் அதிகரிக்கும்.. உஷார்..
Venus Transit In Taurus On 29 June 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து வெளியேறி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் தனது சொந்த ராசிக்கு செல்வது சற்று சிறப்பானது. ஆயினும் இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கலாம்.

முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில், தொழில் வாழ்க்கையில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். இப்போது சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்வதாக இருந்தால் புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். தெரியாதவர்களை நம்பி எதிலும் முதலீடு செய்துவிடாதீர்கள். யாரையும் அதிகம் நம்பாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை சற்று குறையும். மற்றவர்களின் உதவி எதுவும் இக்காலத்தில் கிடைக்காது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்காது. வெற்றி பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கியமாக கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பணம் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை இனிமையாக சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் சோம்பேறித்தனம் அதிகரிக்கும். உங்கள் வேலையில் அலட்சியமாக இருப்பீர்கள். இதனால் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பியிருக்காமல், கடின உழைப்பையும் போட்டால் வெற்றி கிடைக்கம். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகளும், குழப்பங்களும் அதிகரிக்கலாம். திடீர் பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை அறவே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
