Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
நவம்பரில் சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் காதல் மற்றும் செல்வத்தின் அதிபதியாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக அமைந்தால் அவர்களுக்குப் புகழும், செல்வமும், பொருள் இன்பமும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும். லக்னங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சுக்கிரனின் செல்வாக்கு வலுவடையும் அல்லது பலவீனமடையும்.
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுக்கிரன் தனுசு ராசியில் நுழைகிறார். இந்த ராசி மாற்றத்தின் மூலம் சில ராசிகளுக்கு சுக்கிரனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். தனுசு ராசியில் இருக்கும் சுக்கிரன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தனுசு
தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அளிக்கும். சுக்கிரனின் நிலை மாற்றம் அவர்களின் லக்னத்தில் நடைபெறுவதால் இது அவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் தனுசு ராசியின் குணம், நடத்தை மற்றும் ஆளுமை அனைவரையும் ஈர்ப்பதாக இருக்கும், இதனால் அவர்கள் பெரும் நிதி நன்மைகளையும் பெறுவார்கள்.
இந்த நேரத்தில் நண்பர்களின் முழுஒத்துழைப்பு வாழ்க்கையில் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியையும், அமைதியையும் உணர்வீர்கள். திருமண வாழ்க்கையில் துணையின் ஒத்துழைப்பும் ஆதரவும் எப்போதும் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய வெற்றிகள் தேடிவரும்.
மேஷம்
சுக்கிரனின் சஞ்சாரத்தால் பெரிய அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் அடுத்த ராசி மேஷம். மேஷ ராசிக்கு சுக்கிரன் சுப பலன்களைத் தரும் காலம் இது. இந்த ராசியின் அதிர்ஷ்டம் தொடர்பான அம்சத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நிதி நன்மைகள் அவர்களை தேடிவரும். எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் துணைக் கொண்டு எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் வெற்றியைப் பெறலாம்.
உங்களின் ஆளுமையும், எண்ணங்களும் மேலோங்கும். வியாபாரிகள் பணப் பலன்களைப் பெறலாம். சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை பயக்கும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தற்செயலான நிதி ஆதாயம் கிடைக்கும். அவர்களின் கவர்ச்சியான பேச்சால் யாரையும் ஈர்க்க முடியும்.
இந்த காலம் முழுவதும் அவர்கள் நிதிரீதியான பலன்களை அனுபவிக்கலாம் பொருளாதார நிலை வெகுவாக மேம்படும், சேமிப்பும் அதிகரிக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
