Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 01 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க..
Venus Transit In Poorattathi Nakshatra On April 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் சுக்கிரன் ஏப்ரல் 01 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இந்த பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறவுள்ளனர். அதுவும் நல்ல நிதி நன்மைகளையும், சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதையும் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் ஏப்ரல் 01 முதல் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மற்றும் சவால்களை சமாளிக்கும் வகையிலான ஆற்றல் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக இந்த சுக்கிர பெயர்ச்சியானது நன்றாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 01 முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. திட்டமிட்ட வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதன் மூலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதலித்து வந்தால், வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
