Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மூல நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit In Moola Nakshatra On 07 November 2024: ஜோதிடத்தில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான் அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 07 ஆம் தேதி சுக்கிரன் மூல நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது. சுக்கிரன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சுக்கிரன் மூல நட்சத்திரத்திற்கு செல்வதால், எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முடிக்க முடியாமல் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய லாபம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
மூல நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் ரிஷப ராசிக்காரர்கள் பல எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் மற்றும் ஷேர் மார்கெட்டுகளில் இருந்து நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுடன், புதிய பொறுப்புக்களையும் பெறுவார்கள். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கன்னி
மூல நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் கன்னி ராசிக்காரர்கள் பல சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வசதிகள் பெருகும். தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
