Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 வருடத்திற்கு பின் சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய மகாபுருஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பணம் குவியப்போகுது!
Venus Transit In Libra Make Malavya Rajyog 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 28 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் அழகு, ஆரம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், வாழ்வில் நிதி பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார். அந்த வகையில் சுக்கிரன் வருகிற செப்டம்பர் மாதத்தில் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்லவுள்ளார்.

1 வருடத்திற்கு பின் சொந்த ராசிக்கு சுக்கிரன் செல்வதால், பஞ்சமகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நிதி நிலையில் நல்ல உயர்வையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர்.
சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் மற்றும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் புதிய முதலீடுகளால் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புத்திசாலித்தனம் மற்றும் திறமையால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளை ஈர்ப்பீர்கள். இதன் மூலம் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை பெறலாம்.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சுக்கிரனின் அருளால் தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
புதிய தொழிலை தொடங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இருப்பீர்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணத்தை இக்காலத்தில் பெறக்கூடும். ஐடி துறையில் இருந்தால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மொத்தத்தில் இக்காலத்தில் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications