Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
2026 ஆம் ஆண்டின் முதல் சுக்கிர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணப்பிரச்சனை தீரப்போகுது...
Venus Transit In Capricorn On 13 January 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாதம் வரை இருப்பார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானின் ராசிக்கு சுக்கிரன் செல்வது சற்று சிறப்பானது. மேலும் இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது 2026 ஆம் ஆண்டின் முதல் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களை பெறுவார்கள். மேலும் சமூகத்தில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெறுவார்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணும் வாய்ப்புள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். இதன் மூலம் பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குழந்தையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சுக்கிரனின் அருளால் தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











