Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
1 வருடத்திற்கு பின் கடகம் செல்லும் சுக்கிரன்: ஆகஸ்ட் 21 முதல் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு செல்வம் குவியப்போகுது!
Venus Transit In Cancer On 21 August 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளின் அதிபதியாவார்.
சுக்கிரனின் நிலையில் ஒவ்வொரு முறை மாற்றும் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் ஒருவரது காதல் வாழ்க்கை, நிதி நிலை போன்றவற்றில் காணப்படும். மேலும் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல வலுவான நிலையில் இருந்தால் தான் அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அதுவே மோசமான நிலையில் இருந்தால் பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

அந்த வகையில் சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு செல்லவுள்ளார். இந்த கடக ராசிக்கு சுக்கிரன் 1 வருடம் கழித்து செல்லப் போகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் மற்றும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இப்போது 1 வருடத்திற்கு பின் கடக ராசிக்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராசிநாதன் சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திரைப்படத் துறை, இசை, ஃபேஷன் டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிதாக திருமணம் செய்திருந்தால் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு திடீர் பணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். மார்கெட்டிங், பேச்சு, ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணக்கூடும். நீண்ட காலமாக வேலை தேடி கொண்டிருந்தால், இந்த சுக்கிர பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications