Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மீன ராசியில் சுக்கிரன் உதயமாவதால் மார்ச் 28 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Venus Rise In Pisces On 28 March 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் மீன ராசியில் சுக்கிரன் அஸ்தமன நிலையில் உள்ளார்.
இந்நிலையில் மார்ச் 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் உதயமாகவுள்ளார். சுக்கிரன் உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது மீன ராசியில் சுக்கிரன் உதயமாவதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். பணத்தைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. வியாபாரிகள் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். நிதி ரீதியாக பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். அலட்சியத்தால் பயணத்தின் போது பணத்தையும் இழக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கண் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தலைமைத்துவ பண்புகள் மேம்படும். வணிகர்கள் புதிய வணிக ஒப்பந்தங்களைப் பெறலாம். பண ரீதியாக, அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் புதுமண தம்பதிகளின் குழந்தைகளைப் பற்றிய பிரச்சினைகள் மற்றும் கவலைகள் இருக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை தொடர்பாக இடமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். வணிகர்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடலாம். நிதி ரீதியாக, திட்டமிட்டு பணத்தை செலவிட வேண்டியிருக்கலாம். மேலும் எதிர்பாராத செலவுகளையும் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் ஈகோ பிரச்சனைகள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் வசதியின்மை மற்றும் அதிக மன அழுத்தம் ஏற்படலாம். தொழில் ரீதியாக, உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது அதிக வேலை அழுத்தம் காரணமாக இருக்கலாம். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக வாக்குவாதங்களைச் சந்திக்க நேரிடும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளில் வளர்ச்சியின்மையைக் காண நேரிடும். வழக்கமான வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தையும் காணலாம். வேலையில் வளர்ச்சியின்மை மற்றும் போதுமான திருப்தி இல்லாததால் நீங்கள் வேலைகளை மாற்றலாம். வியாபாரிகள் குறைவான லாபத்தைப் பெறக்கூடும். வணிக நடவடிக்கைகளில் திடீர் பின்னடைவுகளைக் காணலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தொடர்புகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் நண்பர்களுடன் தகராறுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் நல்லெண்ணத்தை இழக்க நேரிடும். தொழில் ரீதியாக, வேலையில் நல்ல வருமானத்தையும், புதிய வாய்ப்புகளையும் காண்பீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைக் காணலாம். அதிக அளவு உற்சாகம் மற்றும் ஆற்றல் இருப்பதால், ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில் ரீதியாக அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். வணிகர்கள் மிதமான லாபத்தையே பெறக்கூடும். வணிகர்கள் புத்திசாலித்தனமாக எதையும் கையாள வேண்டும். ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாததால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வேலை தொடர்பாக நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வணிகர்கள் அதிக லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆதரவை இழக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். தொழில் ரீதியாக அதிகப்பளு தொந்தரவு செய்யக்கூடும். வேலைகளை மாற்ற நினைக்கலாம். வணிகர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அதுவும் இது தொழிலை தவறாகக் கையாளுவதால் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அதிக ஈகோ சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். தாயின் ஆரோக்கியத்திற்காக அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். உங்களின் புத்திசாலித்தனம் மேம்படும். வேலை தொடர்பாக நீண்ட பயணம் மேற்கொள்ளலாம். மேலும் அந்த பயணம் நல்ல ஆதாயங்களைத் தரும். புதிய வணிக வாய்ப்புக்கள் மகத்தான லாபத்தைத் தரக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் நெகிழ்வாகப் பேசுவதன் மூலம் அதிக அளவிலான மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். அதிர்ஷ்டம் உங்கள் வழியில் திரும்புவதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனால் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். வணிகர்கள் பணித்திறன் மற்றும் தலைமைத்துவ குணங்கள் காரணமாக நல்ல லாபத்தைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வளர்ச்சியில் தாமதத்தை சந்திக்கலாம். பல தடைகளையும் சந்திக்க நேரிடும். வேலை தொடர்பாக நிறைய சவால்களை சந்திப்பீர்கள். எந்த வேலையையும் திட்டமிட்டு செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் மிதமான லாபத்தை மட்டுமே பெற முடியும். வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். பயணம் செய்யும் போது நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். எனவே கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நவகிரகங்களில் சுக்கிரன் அசுரர்களின் குரு ஆவார். இவர் தேவர்களின் குரு பிரகஸ்பதிக்கு உடன் பிறந்தவர். இவர் காதல், அழகு, உறவுகள், இன்பம், ஆடம்பரம், செழிப்பு மற்றும் கலை போன்றவற்றுடன் தொடர்புடையவர். மேலும் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி.
சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் காலத்தை சுக்கிர அஸ்தமனம் என்று அழைப்பர். இந்த அஸ்தமன நிலையில் சுக்கிரன் பலவீனமாக இருப்பார். இந்த அஸ்தமன நிலையில் இருந்து மீண்டும் சுக்கிரன் பழையபடி பயணிப்பதை சுக்கிர உதயம் என்பர்.
சுக்கிரன் மார்ச் 18 ஆம் தேதி மீன ராசியில் அஸ்தமனமானார். இந்நிலையில் சுக்கிரன் மார்ச் 28 ஆம் தேதி உதயமாகவுள்ளார்.



Click it and Unblock the Notifications