Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
மீன ராசியில் வக்ரமாகும் சுக்கிரன்: மார்ச் 02 முதல் இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல உண்டா?
Venus Retrograde In Pisces 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவர் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதற்கு சுக்கிரன் ஜாதகத்தில் சரியான நிலையில் இருக்க வேண்டும். மேலும் காதல் வாழ்க்கை சிறப்பாகவும் இருக்க சுக்கிரனின் அருள் வேண்டும்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, வக்ர நிலையிலும் பயணிப்பார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 02 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ரமாகவுள்ளார். சுக்கிரன் வக்ரமாவதால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது மீன ராசியில் சுக்கிரன் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணத்தை சேமிக்க முடியாமல் போகும். வருமானத்தில் குறைவு ஏற்படும். இதனால் பணப் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களின் நிலை சுமாராக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பட்ஜெட் பாதிக்கப்படும். எதிர்பாராத மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முக்கியமாக பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் அவதிப்படுவார்கள். தொழில் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண பிரச்சனையாலும் அவதிப்படக்கூடும். வீட்டில் உள்ளோருடன் சண்டை ஏற்படலாம். ஆனால் சொத்துக்களால் ஓரளவு லாபம் கிடைக்ககும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் உறவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி, குடும்ப உறவுகளாக இருந்தாலும் சரி, சற்று மோசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications