Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Venus Retrograde In Libra 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணித்து மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் பொதுவாக ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். அதோடு இவர் அரிதாகவே வக்ர நிலையில் பயணிப்பார்.

இந்நிலையில் இந்த சுக்கிரன் துலாம் ராசிக்கு செப்டம்பர் 02 ஆம் தேதி நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சொந்த ராசிக்கு சுக்கிரன் செல்வது சிறப்பானது. அதுவும் இந்த ராசியில் சுக்கிரன் வழக்கத்திற்கு மாறாக வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சுக்கிரன் நவம்பர் வரை இருப்பார்.
துலாம் ராசியில் சுக்கிரனின் வக்ர சஞ்சாரம் மிகவும் செல்வாக்கு மிக்கது. வக்ரமடையும் சுக்கிரனின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், நிதி மற்றும் உறவுகளில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். இப்போது துலாம் ராசியில் வக்ரமடையும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியை காணக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பணப் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக கைக்கு வர வேண்டிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். ஏராளமான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணக்கூடும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


