Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
164 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள லாப திருஷ்டி யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிகளின் வங்கி இருப்பு அதிகரிக்கும்
Venus Neptune Made Labh Drishti Yog 2025: ஜோதிடத்தில் நவகிரகங்களை தவிர, வேறு சில கிரகங்களும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அந்த கிரகங்கள் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், செல்வாக்கு மிக்கதாக கருதப்படுகிறது. அதில் ஒரு கிரகம் தான் நெப்டியூன். இந்த நெப்டியூன் ஒரு ராசியில் 13 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே ஒரு சுழற்சியை முடிக்க 164 ஆண்டுகள் ஆகும்.
தற்போது நெப்டியூன் மீன ராசியில் உள்ளது. இந்த நெப்டியூன் எப்பேதும் ஏதாவது ஒரு கிரகத்துடன் இணைந்தே இருக்கும். அந்த வகையில் நெப்டியூன் டிசம்பர் 02 ஆம் தேதி, அதாவது இன்று அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனுடன் ஒன்றிணைந்து, சுப யோகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அது தான் லாப திருஷ்டி யோகம். இந்த யோகத்தின் போது சுக்கிரன் விருச்சிக ராசியில் உள்ளார்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இப்போது சுக்கிரன் நெப்டியூனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் லாப திருஷ்டி யோகத்தால் திடீரென்று நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிககும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. வணிகத்தில் நல்ல பலனைப் பெறக்கூடும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேசுவதால், பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் லாப திருஷ்டி யோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும், வெற்றிகளையும் பெறுவார்கள். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். நீண்ட காலமாக வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல பலன்களைப் பெறும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
