Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சனை தீரப்போகுது..
Venus Nakshatra Transit On 10 January 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் ஜனவரி 10 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் உத்திராடம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன்.

இந்த சூரியனின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்று, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காணவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் பல வழிகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினர், பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறக்கூடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிமும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்து, அதற்கு முயற்சித்தால், நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். சொந்த தொழிலை தொடங்கியிருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் பணத்தை அதிகமாக சேமிக்கவும் முடியும். பங்குச் சந்தை மூலம் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications