Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் சமசப்தக் யோகம்: டிசம்பரில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Venus Mars Make Samsaptak Rajyog On December 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தற்போது சந்திரனின் ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் டிசம்பர் 02 ஆம் தேதி சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் இருப்பதால், சமசப்தக் ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இந்த ராஜயோகமானது டிசம்பர் 02 ஆம் தேதி முதல் டிசம்பர் 28 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இப்போது செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் சமசப்தக் ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
சமசப்தக் ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளிப்பீர்கள். வேலை, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இக்காலத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மேலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலை நன்கு வலுவடையும்.
கன்னி
சமசப்தக் ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் நல்ல நிதி ஆதாயங்களையும் பெறக்கூடும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து பெரிய அளவில் லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். நிறைய சேமிக்க முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகத்தால் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் தொழில் ரீதியாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகர்கள் பெரிய அளவில் லாபத்தைத் தரும் புதிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இருப்பினும் பண விஷயத்தில் அசால்ட்டாக இருக்காமல், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications