Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
மீன ராசியில் சுக்கிரன்: மே வரை இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் இதெல்லாம் நடந்தே தீரும்..
Venus In Pisces Till May 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் சுக்கிரன் பயணிப்பதால், மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. சுக்கிரன் இந்த மீன ராசியில் மே மாதம் வரை பயணிக்கவுள்ளார்.

மீன ராசியில் சுக்கிரன் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கும். முக்கியமாக சுக்கிரன் மீன ராசியில் இருக்கும் காலத்தில், சில ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது மீன ராசியில் சுக்கிரன் பயணிப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு மே மாதம் வரை சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். பங்குச் சந்தை, லாட்டரி ஆகியவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்து வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மே மாதம் வரை அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும் மற்றும் இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
