Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஏப்ரலில் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Venus Direct In Pisces On 13 April 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் இந்த ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் மூலம் கிடைக்கும் நற்பலன்களில் தடைகளையும், தாமதத்தையும் சந்திக்க நேரிடும். இப்படி வக்ர நிலையில் சுக்கிரன் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இந்நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

இப்படி வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்கள் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை, ஆசிரியர் மற்றும் வழிகாட்டியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் கொடுக்கப்படும் இலக்குகளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம், போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை குடும்பத்தில் நடந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏப்ரல் முதல் வெற்றிகளைக் குவிப்பார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல வேலை தேடி வரும். காதல் வாழ்க்கையில் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
