Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: நாளை முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Venus Direct In Pisces On 13 April 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் தற்போது தனது உச்ச ராசியும், குரு பகவானின் ராசியுமான மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இந்த சுக்கிரன் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இதனால் சுக்கிரனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் இதுவரை தடைகள் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இந்த சுக்கிரன் ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கினால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வெளிநாட்டு பயணம் தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். வீட்டு செலவுகள் சற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். தம்பதிகளுக்கு இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். வேலையில் வெற்றியும், நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். அதுவும் ஊடகம், ஃபேஷன் துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல பலனைத் தரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடனான உறவு நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வீடு, வாகனம் தொடர்பான வாங்குவது விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் மற்றும் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்களின் மன உறுதி அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று சவாலானதாக இருக்கும். ஆனால் போக போக நன்றாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உங்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நோய்களில் இருந்து விடுபடுவார்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்பட்டு, வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் புதிய திட்டத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வீட்டு விஷயங்களில் மன அழுத்தம் குறைவாக இருக்கும். பணியிடத்தில் ரிலாக்ஸாக இருப்பீர்கள். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். சுக்கிரனின் அருளால் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்திலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வத்தில் அதிகரிப்பு ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் நல்ல எவற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திட்டங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக நடைபெறும். நிதி நிலைமை மேம்படும், உங்கள் இலக்குகளை அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











