Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: ஏப்ரல் 13 முதல் இந்த ராசிக்காரங்க வாழ்க்கை பிரகாசிக்கப்போகுது..
Venus Direct In Pisces On 13 April 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, வக்ர நிலையிலும், அதாவது பின்னோக்கியும் பயணிக்கும்.
அதோடு வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையிலும் பயணிக்கும். இப்படி கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.

இந்த சுக்கிரன் செல்வம், அழகு, காதல், செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். கிரகங்கள் வக்ர நிலையில் பலவீனமாக இருக்கும் மற்றும் அவற்றால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தாமதமாகும்.
இந்நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல நிதி ஆதாயத்தையும் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதிர்ஷ்ட வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். உறவுகளிலும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபராக இருந்தால், நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை அல்லது வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்க நேரிடும். நிதி நிலை வலுவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, பிணைப்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றறை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். தந்தையுடனான உறவு வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலைகளில் வெற்றிகள் குவியும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இதுவரை பணப்பிரச்சனை இருந்தால், அது தீரும். பணியிடத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களின் புகழ் அதிகரிக்கும் மற்றும் மரியாதையும் உயரும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications