அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்..

Venus Combust In Libra On 19 October 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் மாதம் ஒருமுறையாவது தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அந்த தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் நிதி நிலையிலும் காணப்படும்.

Venus Combust In Libra On 19 October 2026 These Zodiac Signs Face Financial Problem

தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் அக்டோபர் 19 ஆம் தேதி துலாம் ராசியில் அஸ்மதனமாகவுள்ளார். அதாவது சூரியனுக்கு அருகில் தனது பயணத்தை தொடங்கி பலவீனமான நிலையில் இருக்கப் போகிறார். அதுவும் அக்டோபர் 29 ஆம் தேதி வரை இருந்து, பின் உதயமாகவுள்ளார்.

சுக்கிரனின் இப்படியான நிலையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். அதில் சிலருக்கு பொற்காலமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது துலாம் ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இப்படி உடல்நலம் பலவீனமாக இருப்பதால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தொழில் ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். முக்கியமாக வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் குறித்த கவலைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்காமல் போகும். இதன் மூலம் அலுவலகத்தில் நிறைய சிரமங்களை சந்திக்கக்கூடும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். இதன் மூலம் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும். தன்னம்பிக்கை குறையும். வசதிகள் பாதிக்கப்படலாம். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் விஷயங்களில் சிரமங்களை சந்திக்க நேரிடும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தில் குறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் பணப்பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும். தேர்வுகளை எழுதியிருப்பவர்கள் முடிவுகள் குறித்து அதிக கவலைப்பட நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 14, 2026, 23:10 [IST]
Desktop Bottom Promotion