Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க பிறக்கும் போதே துரதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்... இந்த பாவப்பட்ட ராசில உங்க ராசி இருக்கா?
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு ஆளுமை இருக்கும். அதேபோல அவர்களுக்கென சில குணாதிசயங்களும் இருக்கும். சிலர் எந்த பெரிய முயற்சியும் செய்யாமலேயே வாழ்க்கையில் அவர்கள் விரும்பியதை எளிதில் அடைந்து விடுவார்கள். சிலர் இதற்கு முற்றிலும் நேர்மாறாக வாழ்க்கையில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்கள் நினைத்த எதையும் செய்ய முடியாது.
சிலருக்கு வெற்றி எளிதில் கிடைப்பதற்கும், சிலருக்கு எவ்வளவு போராடினாலும் வெற்றி கிடைக்காமல் போவதற்கும் அவர்களுடன் பிறந்த அதிர்ஷ்டம் காரணமாக இருக்கலாம். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கும், ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு சுத்தமாக இருக்காது.

அவர்கள் பிறக்கும் போதே துரதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடினமான தருணங்களா அனுபவிக்க வேண்டியிருக்கும். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பதட்டமும், அழுத்தமும் நிறைந்திருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் தீவிரமானவர்கள் மற்றும் கடினமானவர்கள், ஆனால் அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகள் அவர்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். அவர்கள் அனைத்து விஷயங்களைப் பற்றியும் கடுமையாக சிந்திக்கிறார்கள், மேலும் சில சமயங்களில் அவர்களின் இருண்ட எண்ணங்களில் தொலைந்து போகிறார்கள், இது சாதாரண விஷயங்களைக் கூட அவர்களுக்கு பெரிதாகக் காட்டும்.
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமானவர்கள், ஆனால் அவர்கள் மனதில் வெறுப்பும், பகையும் நிறைந்திருக்கும், இது அவர்களை தேடிவரும் அதிர்ஷ்டத்தைக் கூட தள்ளிவிடும். இதனால் அவர்கள் நல்ல விஷயங்களை தவற விட்டு மோசமான விஷயங்களில் சிக்கிக் கொள்வார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் கடின உழைப்பாளிகள், ஆனால் அவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகம் கவலைப்படுவார்கள், இது அவர்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
அவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்ய விரும்புகிறார்கள், அப்படி செய்ய முடியாத போது அவர்கள் மிகவும் பதட்டமாகவும், கவலையாகவும் உணர்வார்கள். இந்த மன அழுத்தம் வேலைகளை தவறாக செய்வது அல்லது வாய்ப்புகளைத் தவற விடுவது போன்ற சவால்களைத் தூண்டும். கன்னி ராசிக்காரர்கள் ஒவ்வொரு சிறிய முட்டாள்தனத்தையும் கண்டுபிடிக்கிறார்கள், வாய்ப்புகளை விட தவறுகளில் கவனம் செலுத்துவது துரதிர்ஷ்டத்தை இழுக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடினமாக உழைத்து பெரிய இலக்குகளை அடைவதை இலட்சியமாகக் கொண்டவர்கள். அவர்கள் மிகவும் மனஉறுதி கொண்டவர்கள், ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவர்கள், ஆனால் அவர்களின் தீவிரமான மனநிலை துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். வெற்றிபெற வேண்டும் என்ற தீவிர ஆர்வத்தில் அவர்கள் பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள், இது சவால்களை மேலும் கடினமானதாக மாற்றும்.
மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் தாங்கள் தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள், இது அவர்களுக்கு தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அமைதியின்மையும், சிக்கல்களும் துரத்திக் கொண்டேயிருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கனவுகள் நிறைந்த இரக்கமுள்ள ஆன்மாக்கள். இந்த அன்பான மனிதர்கள் எப்போதும் கற்பனை உலகத்தில் வாழ விரும்புகிறார்கள், ஆனால் அவர்களின் அடிக்கடி மாறும் மனநிலை துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். அவர்கள் சரியான விஷயங்களை செய்வதை சில சமயங்களில் வெறுக்கலாம், இது சவால்களைத் தூண்டுகிறது.
அவர்கள் அனைத்து விஷயங்களைப் பற்றியும் மற்றவர்களை விட அதிகமாக சிந்திக்கிறார்கள், அதனால் அவர்கள் சோகமான எண்ணங்களில் சிக்கிக் கொள்ளலாம், இது துரதிர்ஷ்டத்தை வரவழைக்கலாம். அவர்கள் அனைவரையும் நம்புகிறார்கள், இது நல்ல விஷயமாக இருந்தாலும், அது பெரும்பாலும் அவர்களுக்கு ஆபத்துகளையே ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
