Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்காரங்க காதல் விஷயத்துல துரதிர்ஷ்டசாலிங்களாம்.. இவங்களுக்கு காதலே செட் ஆகாது...
Unlucky Zodiac Signs In Tamil: நாம் ஒவ்வொருவருமே நம் வாழ்க்கையில் முறையாவது காதலில் விழுந்திருப்போம். ஆனால் அனைவருக்குமே அந்த முதல் காதல் செட் ஆவதில்லை. சிலர் காதலித்த பெண்/ஆணை திருமணம் செய்து, நல்ல செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் இன்னும் சிலர் காதலித்த நபருடன் வாழும் அதிர்ஷ்டத்தை பெறாமல், தனக்கு அமைந்த வாழ்க்கையை ஏற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவார்கள்.
ஜோதிடத்தின் படி, காதல் விஷயத்தில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், சிலர் துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பர். அதிர்ஷ்டசாலிகளுக்கு முதல் காதலே திருமணம் வரை செல்லும். துரதிர்ஷ்டசாலிகள் எத்தனை முறை காதலித்தாலும், அந்த காதல் தோல்வியடையும். அந்த வகையில் காதல் விஷயத்தில் எந்த ராசிக்காரர்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள் என்பதைக் காண்போம்.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் லட்சியவாதிகள். குறிக்கோளுடன் வாழ்க்கையை வாழ்வார்கள். இலக்கை நோக்கி பயணிக்கும் இவர்களின் குணம், சில சமயங்களில் அவர்களை காதலில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் எப்போதும் தங்களின் தொழிலில் அதிக கவனத்தை செலுத்தி, தனது துணையின் உணர்ச்சிகளை பூர்த்தி செய்ய தவறுவதால், அவர்களின் காதல் வாழ்க்கை சற்று மோசமாகவே இருக்கும். இந்த ராசிக்காரர்கள் எத்தனை முறை காதலில் விழுந்தாலும், அவர்களின் காதல் தோல்வியையே அடையும்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள். அதே சமயம் இவர்களும் லட்சியவாதிகள். இதனால் இவர்களின் காதல் வாழ்க்கையும் சற்று மோசமாகவே இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் தவறான நபர்களுடன் தொடர்பு கொள்வதால், அவர்களின் உறவு விரைவில் முறியும்.
கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள். இப்படி சுதந்திரமாக இருக்க நினைப்பதால், இவர்களை காதலிப்பவர் கட்டுப்படுத்தும் போது, அது காதல் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால் இவர்களின் காதல் முறிவடைய இதுவே முதன்மையான காரணமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். தனது துணைக்கு விசுவாசமாக இருக்க நினைப்பார்கள். ஆயினும் இந்த ராசியின் அதிபதி செவ்வாய். எனவே இந்த ராசிக்காரர்கள் சற்று ஆதிக்கம் செலுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதால், இவர்களின் உறவுகளும் சற்று மோசமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியைச் சேர்ந்தவர்களும் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். சிறு பிரச்சனைகளுக்கும் இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பார்கள். இப்படியான குணம் இவர்களின் காதல் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, இவர்களை காதல் விஷயத்தில் துரதிர்ஷ்டசாலிகளாக்குகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











