Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்!
Trigrahi Yog In Leo 2025 After 50 Years: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப மற்றும் அசுப யோகங்களையும் உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அப்படி ஒரு மங்களகரமான ஒரு யோகம் தான் செப்டம்பர் மாதத்தில் உருவாகவுள்ளது. அது தான் திரிகிரக யோகம். அதுவும் இந்த யோகமானது சிம்ம ராசியில் உருவாகவுள்ளது. இந்த யோகம் சூரியன், கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சூரியன், கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியும் பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். சிக்கிய பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புக்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்புகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications