Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
50 ஆண்டுகளுக்கு பின் மிதுனத்தில் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கபோகுது!
Trigrahi Rajyog 2025 In Gemini After 50 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பலவிதமான யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ஜூலை 26 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இதனால் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிரனும் ஒன்றாக பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி சந்திரன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் காரணமாக மிதுன ராசியில் சுக்கிரன், குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த திரிகிரக ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணும் வாய்ப்புள்ளது. இப்போது மிதுன ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். தந்தையின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் பிரபலமாவார்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் அதிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருகூகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால் அல்லது ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரலாம். தொழிலதிபர்கள் இரட்டிப்பு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications