Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
திரிகிரக யோகம் மீன ராசியில் உருவாகுவதால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும். சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது சக்திவாய்ந்த ராஜ யோகங்களை உருவாக்குகிறது. மார்ச் மாத இறுதியில் ஒரு திரிகிரக ராஜயோகம் உருவாகப்போகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப் பெயர்ச்சியுடன் இணைந்து இந்த ராஜயோகம் உருவாகிறது.
இது 12 ராசிகளிலும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகளுக்கு சற்று அதிக நன்மைகளைத் தரப்போகிறது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் பெயர்ச்சியும் இந்த நேரத்தில் நடைபெறுகிறது.

சனிபகவான் தனது மூலராசியான கும்ப ராசியை விட்டு வெளியேறி, குருபகவானின் ராசியான மீன ராசியில் நுழைவார். இந்த ராசியில் ஏற்கனவே சூரியன், சுக்கிரன், புதன், ராகு ஆகியோர் உள்ளனர். இவற்றில் சுக்கிரன், ராகு, மீனம் ஆகிய ராசிகளின் சேர்க்கை மிகவும் முக்கியமானது. இந்த மூன்று கிரகங்களும் இணைந்துதான் திரிகிரக யோகத்தை உருவாக்குகிறது. இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
திரிகிரக யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. மேலும், இதனால் அவர்கள் வாழ்க்கையில் பல நன்மை பயக்கும் விஷயங்கள் நடக்கும். நீண்டகாலமாக அவர்கள் மனதில் இருந்த ஒரு ஆசை நிறைவேறும். இது அவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். நீங்கள் சமூகத்தில் அதிக மரியாதையைப் பெறுவீர்கள், மேலும் வணிகத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். இது முதலீட்டிற்கு சிறந்த நேரமாகும். எனவே துணிந்து புதிய முயற்சிகளில் இறங்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, திரிகிரக யோகம் அவர்களின் இரண்டாவது வீட்டில் உருவாவதால் அவர்கள் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். இந்த யோகத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். மேலும், நிதி நிலைமை சாதகமாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியம் அவர்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
சனிபகவான் மற்றும் சுக்கிரனின் ஆசீர்வாதம் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கப்போகிறத. நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். அவர்கள் தலைமைத்துவ பொறுப்புகளில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத்தில் ஆதாயங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகம் வாழ்க்கையில் பல நற்பலன்களை அளிக்கப்போகிறது. அவர்களின் பத்தாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. அவர்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் செய்வதற்கான காலமிது. வேலை தேடுபவர்களுக்கு இப்போது அவர்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தொழில் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் அவர்களுக்கு அங்கீகாரமும் பதவி உயர்வும் கிடைக்கும். அவர்கள் நிதி நிலைமை குறித்து நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. சில புதிய சொத்துக்களைக் கூட வாங்கலாம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
