Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க பாக்கெட் காலியாகப் போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரக பெயர்ச்சிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. தற்போது புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் ஒரே ராசியில் தங்கள் நிலைகளை ஒருங்கிணைக்க உள்ளன. மூன்று சக்திவாய்ந்த கிரகங்கள் ஒன்றாக இணைவதால், மீன ராசியில் ஒரு திரிகிரக யோகம் உருவாகிறது. தற்போது, ராகுவும் சுக்கிரனும் மீன ராசியில் உள்ளனர். அதேசமயம் கிரகங்களின் இளவரசரான புதன் பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையப் போகிறது.
சில ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகம் நற்பலன்களைத் தரப்போகிறது, அதேசமயம், சில ராசிக்காரர்கள் இதனால் துரதிர்ஷ்டத்திற்கு ஆளாகப் போகிறார்கள். அவர்கள் கவனமாக இல்லாவிட்டால் அவர்கள் பல கஷ்டங்களையும், சிரமங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
திரிகிரக யோகத்தால், மேஷ ராசிக்காரர்கள் கடினமான காலகட்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். உங்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் நிகழ்வுகள் ஏற்படலாம். உங்கள் தொழிலில் பல தடைகளை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் சிறிய இழப்புகள் பெரிய இழப்புகளாக மாற வாய்ப்புள்ளது. தொழிலில் புதிதாக யாரையும் நம்ப வேண்டாம். பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது கவனமாக இருங்கள். பணத்தை முறையாகக் கையாள்வதில் கவனமாக இருப்பதும் நல்லது.
வேலையில் இருப்பவர்கள் பல்வேறு சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்களின் மனஉறுதியை நீங்கள் இழக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்கள் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்காதீர்கள். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். பெரிய நஷ்டங்களைத் தவிர்க்க சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல மனநலப் பிரச்சினைகளை அதிகரிக்கும். பதற்றத்தை அதிகரிக்கும் பல சம்பவங்களை நீங்கள் காண வேண்டியிருக்கலாம். சில சமயங்களில் நீங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். வேலையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் காரணமாக அவர்களால் பல விஷயங்களை கவனமாக முடிக்க முடியாமல் போகலாம்.
தனியாக பல முடிவுகளை எடுப்பதற்கு முன், அனுபவசாலிகளின் கருத்தைப் பெறுவது நல்லது. பணத்தைக் கவனமாக பயன்படுத்துவது அவசியம். தேவையற்ற விஷயங்களுக்காக அதிக பணம் செலவழிக்காமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகத்தால் பல சிரமங்கள் ஏற்படப் போகின்றன. அவர்களின் பல திட்டங்கள் இப்போது தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது. அவர்களின் தோல்விகள் அவர்களுடைய மனஉறுதியை குலைக்கலாம். பணவிஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் பல்வேறு சிரமங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.
இந்த ராசிக்காரர்கள் சொல்லும் பல விஷயங்கள் தவறான புரிதல்களாக மாற வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுடைய எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் பிரச்சினைகள் அவர்களின் கைமீறி செல்லலாம். எனவே எதையும் செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












