Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
இந்த 5 ராசிக்காரங்க அவங்க நண்பர்களை 'அம்மா' போல பாத்துக்குவார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். வாழ்க்கையில் அனைவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு உறவென்றால் அது நண்பர்கள்தான். இந்த உலகில் காதலி இல்லாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாதவர்கள் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் வித்தியாசமான நண்பராக இருப்பார்கள். சிலர் சுயநலமான நண்பர்களாக இருப்பார்கள், சிலர் தேவைப்படும் போது மட்டும் அழைக்கும் நண்பர்களாக இருப்பார்கள்.
சிலரோ உண்மையான அக்கறை செலுத்தும் நண்பராக இருப்பார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று நண்பர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல நடத்துவார்கள். அவர்கள் தங்களின் தேவைகளை விட தங்கள் நண்பர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் நண்பர்கள் குழுவின் 'அம்மா' என்று அழைக்கப்படுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களை குடும்பத்தினர் போல நடத்துவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் கடக ராசிக்காரர்கள். கடக ராசியில் பிறந்தவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள் மற்றும் தங்கள் நண்பர்களைக் குடும்பத்தினரைப் போல நேசிக்கிறார்கள். நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும் போதோ அல்லது சோகமாக இருக்கும்போதோ ஒரு கடக ராசி நண்பர் தான் முதலில் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ஆறுதல் அளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களின் பிரச்சினைகளை வெறுமனே கேட்பது மட்டுமல்லாமல், தங்கள் அரவணைப்பான இருப்பால் உங்களை பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணர வைப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பர்பெக்ட்டான நண்பர்களாக இருப்பார்கள் மற்றும் எதார்த்த அணுகுமுறை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களின் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் அனைத்தையும் சரியாக செய்கிறீர்களா என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, நீங்கள் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டீர்களா, வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரையை போட்டீர்களா, அலுவலக வேலையை சரியான நேரத்தில் முடித்துவிட்டீர்களா என உங்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் சற்று கண்டிப்பான நண்பர்களாகத் தோன்றலாம், உங்கள் தவறுகளுக்காக உங்களைக் கண்டிக்கவும் செய்யலாம், ஆனால் அவர்களின் கண்டிப்புக்குப் பின்னால் எப்போதும் உங்கள் நலன் மீதான உண்மையான அக்கறை நிறைந்திருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மன உறுதி கொண்டவர்கள், விசுவாசமானவர்கள். அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு கவசம் போல துணையாக நிற்பார்கள். அவர்கள் நம்பகத்தன்மை மிக்கவர்கள். தங்கள் நண்பர்களுக்கு எப்போது பிரச்சனை வந்தாலும், அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுக்கு உதவ ஓடி விடுவார்கள். தங்கள் நண்பர்களுக்கு நல்ல விஷயங்களை வழங்குவதிலும், எல்லா வகையிலும் அவர்களை பாதுகாப்பாக உணர வைப்பதிலும் தீவிர விருப்பம் கொண்டவர்கள். அவர்களின் அன்பு மிகவும் நிலையானது மற்றும் உண்மையானது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க விரும்பும் கண்டிப்பான அம்மா போன்றவர்கள். அவர்கள் தங்கள் நண்பர்களை தேவையற்ற சிக்கல்களிலிருந்து பாதுகாத்து, எப்போதும் சரியான பாதையில் வழிநடத்துவார்கள். அவர்கள் சற்று தீவிரமானவர்களாக இருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளுக்கு ஆலோசனை தேவைப்படும்போதெல்லாம், அனைவரும் தேடிச் செல்வது அவர்களைதான். தங்கள் நண்பர்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் வாழ்க்கையில் சரியான திசையில் முன்னேறுவதை அவர்கள் உறுதி செய்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நண்பர்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். ஒரு அம்மா தனது வீட்டில் ஏற்படும் சண்டைகளைத் தீர்ப்பது போலவே துலாம் ராசிக்காரர்கள் நண்பர்கள் குழுவில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருக்கவும், குழுவில் யாரும் அநியாயமாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் விரும்புகிறார்கள். அவர்களின் குணம் மிகவும் நட்பானது மற்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்வது. இது அவர்களை அனைவரும் விரும்பும் நண்பர்களாக மாற்றுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
