Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரர்களுக்குள் ஆபத்தான மிருகம் தூங்கிட்டு இருக்குமாம்...அது எழுந்தா அவ்வளவுதான்...உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்குள்ளும் ஒரு தனித்துவம் இருக்கும். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான ஆளுமைகளைக் கொண்டுள்ளனர். சில ராசிக்காரர்கள் தங்கள் வசீகரம் மற்றும் மென்மையான வெளித்தோற்றத்திற்குப் பின்னால் ஒரு இருண்ட முகத்தைக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் வெளிப்படையாகவே ஆபத்தானவர்களாக இருந்தாலும், சிலர் மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளால் தூண்டப்படும்போது ஆபத்தானவர்களாக மாறக்கூடும்.
மிகவும் ஆபத்தான மற்றும் தீய ஆளுமைக் கொண்ட ராசிக்காரர்களை தெரிந்து கொள்வது யாரை நம்புவது, யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்குள்ளும் நல்ல மற்றும் கெட்ட பண்புகள் உள்ளன, ஆனால் சில ராசிக்காரர்கள் தங்கள் இருண்ட பக்கத்தை மற்றவர்களை விட வலுவாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்குள் எப்போதும் மிருகம் தூங்கிக் கொண்டிருக்கும். அது எழாமல் இருப்பதுதான் அனைவருக்கும் நல்லது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்குள் ஆபத்தான மிருகம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தான ராசிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். கொடிய விஷமுள்ள தேளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இந்த நீர் ராசி செவ்வாய் மற்றும் புளூட்டோவால் ஆளப்படுகிறது, இவை இரண்டும் சக்தி மற்றும் மாற்றத்துடன் தொடர்புடைய கிரகங்களாகும். விருச்சிகம் துரோகம் செய்யப்பட்டதாக உணரும்போது, அவர்களின் அமைதியான முகம் ஆபத்தான கோபத்தை மறைக்கிறது.
அவர்கள் மனித உணர்வுகளைப் பற்றி ஆழமான புரிதல் உள்ளவர்கள், இதனால் அவர்கள் மற்றவர்களின் பலவீனங்களை எளிதில் தெரிந்து கொள்கிறார்கள். எனவே அவர்கள் திருப்பி தாக்கும் போது எதிரிகளால் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் ரகசியத்திற்கு பெயர் பெற்றவர்கள், இது அவர்களை சக்திவாய்ந்தவர்களாகவும், சூழ்ச்சியானவர்களாகவும் மாற்றுகிறது. பழிவாங்கலை அமைதியாகத் திட்டமிடும் அவர்களின் திறன் அனைவரையும் அச்சுறுத்தும் ஒன்றாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அமைதியானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் தோன்றலாம், ஆனால் அவர்கள் மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நபர்களாகவும் இருக்கலாம். சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் லட்சியவாதிகள் மற்றும் பொறுமைசாலிகள். அவர்கள் அரிதாகவே உடனடியாக கோபப்படுவார்கள், மற்ற சமயங்களில் அதற்குப் பதிலாக, அவர்கள் துல்லியமாக திட்டமிட்டு சரியான நேரத்தில் தாக்குவார்கள்.
அதிகாரம் மற்றும் வெற்றிக்கான அவர்களின் வலுவான ஆசை அவர்களை இரக்கமற்றவர்களாகக் காட்டக்கூடும். போட்டி அல்லது வணிகத்தில், மகர ராசிக்காரர்கள் எப்போதும் வெற்றியில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இந்த சூழல் அவர்களிடம் இரக்கம் என்பதே இருக்காது.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக வெளித்தோற்றத்திற்கு மென்மையாகவும், அன்பாகவும் தோன்றுவார்கள், ஆனால் அவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். துரோகம் செய்யப்படும்போது, ரிஷப ராசிக்காரர்கள் மோசமான பழிவாங்கும் குணம் கொண்டவர்களாகவும், விட்டுக்கொடுக்காதவர்களாகவும் மாறுவார்கள்.
அவர்கள் எப்போதும், யாரையும் எளிதில் மன்னிக்க மாட்டார்கள், அவர்களின் உணர்வுகளை துளியும் வெளிக்காட்டாமல் அமைதியாக தங்கள் பழிவாங்கலை திட்டமிடுவார்கள். அவர்களின் பொறுமை அவர்களை சரியான தருணத்திற்காக காத்திருக்க வைக்கிறது. காயமடைந்த ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் மௌனத்தையும், பொறுமையையும் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்.
மிதுனம்
இரட்டையர்களால் பிரதிநிதுத்துவப்படுத்தப்படும் மிதுன ராசிக்காரர்கள், விரைவான சிந்தனை மற்றும் வசீகரத்திற்கு பெயர் பெற்றவார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக தவறுகள் நடக்கும்போது அவர்களின் விளையாட்டுத்தனம் உடனடியாக தலைகீழாக மாறும். மிதுன ராசியின் இரட்டை ஆளுமை அவர்களை கணிக்க முடியாதவர்களாக மாற்றுகிறது.
அவர்கள் ஒரு கணம் அன்பாகவும், அடுத்த கணமே பற்றில்லாதவர்களாகவும் இருக்கலாம். கோபப்படும்போது, அவர்கள் தங்கள் வார்த்தைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம், மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தலாம் அல்லது ஏமாற்றலாம். அவர்களின் புத்திசாலித்தனம் சூழ்நிலைகளை கையாளவும் அதிலிருந்து தப்பிக்கவும் அனுமதிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
