Latest Updates
-
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்க பொய் சொல்லி ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்...இவங்க சொல்ற பொய்ய யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
மனிதர்கள் அனைவருமே நிச்சயம் தங்கள் வாழ்க்கையில் பொய் கூறுபவர்களாகத்தான் இருப்பார்கள். அய்யன் வள்ளுவர் கூட நன்மைக்காக பொய் சொல்லலாம் என்று கூறியுள்ளார். நாம் தினமும் நமது நன்மைக்காகவோ அல்லது பிறருக்காகவோ நிச்சயம் பொய் சொல்வோம். மொத்தத்தில் பொய்கள் மனித வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும். எல்லோருமே பொய் பேசினாலும் சிலர் அதில் மற்ற அனைவரையும் விட சிறந்தவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் பொய் சொல்வதில் நிபுணர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களின் நன்மைகளுக்காகவோ, சுயநலத்திற்காகவோ, மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவோ அல்லது தங்கள் திறமையை நிரூபிப்பதற்காகவோ தொடர்ந்து பொய் கூறுவார்கள். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அவர்கள் சொல்லும் பொய்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் தங்கள் பொய் சொல்லும் திறமையால் யாரை வேண்டுமென்றாலும் ஏமாற்றுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பொய் சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தகவல் தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படுகிறார்கள், இதனால் அவர்கள் அதிகம் பேசக்கூடியவர்களாகவும், புத்திசாலிகளாகவும், குறும்புக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கவும், எளிதில் பொய்களை கட்டவிழ்த்துக் விடுபவர்களாவும் இருக்க முடியும்.
இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், அடிக்கடி தங்கள் வார்த்தைகளை மாற்றி பேசுபவர்களாகவும் இருப்பதால், அனைவரும் நம்பும்படியான பொய்களை உருவாக்குவது அவர்களுக்கு மிகவும் எளிதானதாக இருக்கிறது. அவர்களின் வசீகரமும் புத்திசாலித்தனமும் பெரும்பாலும் அவர்களின் பொய் சொல்லும் முகத்தை எளிதில் மறைக்கின்றன, இதனால் அவர்கள் சொல்லும் பொய்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ரகசியமானவர்கள் மற்றும் ஆழமான உள்ளுணர்வு கொண்டவர்கள். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளையும், நோக்கங்களையும் மற்றவர்களிடமிருந்து மறைப்பதில் நிபுணர்களாக இருப்பார்கள், இது அவர்களை ஏமாற்றுவதில் திறமையானவர்களாக மாற்றுகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் பொய் சொல்லும்போது அதன் விளைவுகள் பற்றி அவர்கள் முன்கூட்டியே கணக்கிட்டு இருப்பார்கள், அதனால் அவர்களின் பொய்களில் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியாது.
அவர்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிவார்கள் மற்றும் தங்கள் இலக்குகளை அடைய உண்மையை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் பொய் சொல்லும் போது அதை நிதானமாகவும், உறுதியாகவும் கூறுவார்கள். அவர்களின் பொய்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அனைத்து உறவுகளிலும் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை உருவாக்க விரும்புகிறார்கள்.மற்ற ராசிக்காரர்களைப் போல இவர்கள் தங்கள் நன்மைகளுக்காக பொய் சொல்வதில்லை மாறாக தங்கள் சூழலில் அமைதியை நிலைநாட்ட அல்லது மோதல்களைத் தவிர்க்க பொய் சொல்கிறார்கள்.
அவர்களின் வசீகரமான ராஜதந்திரம் மற்றும் சமூகத் திறன்கள் அவர்களின் பொய்களை மிகவும் மென்மையாகவும், கண்டறிவதை கடினமாகவும் மாற்றுகின்றன. அவர்களின் அமைதியான தோற்றமும், அணுகுமுறையும் அவர்கள் பொய் சொல்லவே மாட்டார்கள் என்று அனைவரையும் நம்ப வைக்கும். துலாம் ராசிக்காரர்கள் தீங்கு விளைவிக்கும் பொய்களை விட மற்றவர்களைப் பாதிக்காத பொய்கள் அல்லது சின்ன சின்ன ஏமாற்று வேலைகளைச் செய்கிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசக்காரர்கள், நம்பிக்கையானவர்கள், பொய்கள் சொல்வதில் ஆர்வம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது சூழலை உற்சாகமாக வைத்திருக்கவோ உண்மையை மிகைப்படுத்துவார்கள் மற்றும் பொய்களைக் கூறுவார்கள்.
அவர்களின் இயல்பான உற்சாகமும், சுதந்திரத்தின் மீதான அன்பும் அவர்களின் பொய்களை உண்மையானதாகவும், எதார்த்தமானதாகவும் காட்டக்கூடும். தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் தீய நோக்கத்துடன் பொய் சொல்ல மாட்டார்கள். பெரும்பாலும் அவர்களின் பொய்கள் பாதிப்பில்லாதவை அல்லது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கம் கொண்டவையாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
