இந்த 4 ராசி ஆண்கள் சுயநலமான கணவராக இருப்பார்களாம்... ரொம்ப மோசமானவர்களாம் இவங்க... உங்க ராசி இதுல இருக்கா?

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உறவாகும். ஒரு மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண உறவு ஒருவருக்கு அனைத்து நன்மைகளையும் கொடுக்கும். ஆனால் திருமணத்தை வெற்றிகரமாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு திருமணத்தை வெற்றிகரமான மாற்றி தம்பதிகளை இறுதிவரை பிணைத்து வைத்திருக்க அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மரியாதை மற்றும் நிறைய புரிதல் தேவை.

இருப்பினும், சிலர் தங்கள் திருமண வாழ்க்கையில் சுயநலமாக இருப்பதைத் தவிர்க்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு திருமண பந்தத்தில் இணைந்திருந்தாலும், தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாட்டார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் தேவைகளை மட்டுமே முக்கியமென்று கருதுவார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இப்படி சுயநலமான கணவன்/மனைவியாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Top 4 Zodiac Signs Who Are Always Selfish in Marriage

மேஷம்

மேஷ ராசிக்காரர்களிடம் இயற்கையாகவே பல நல்ல குணங்கள் இருக்கலாம். ஆனால் தங்கள் தேவைகளை மட்டும் கவனித்துக் கொள்வதில் அவர்கள் மிகவும் மோசமான சுயநலவாதிகளாகவும், கடினமான பிடிவாதக்காரர்களாகவும் இருக்கலாம். தங்கள் துணை என்ன விரும்புகிறார் என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள், மாறாக, தங்கள் சுய முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் சுயநல இயல்பு ஒரு நல்ல திருமணத்திற்கான சாத்தியத்தை முற்றிலுமாக நீக்குகிறது. இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் மன உறுதிக்கும், பிடிவாதத்திற்க்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, உலகம் அவர்களின் உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையைச் சுற்றி மட்டுமே சுழல்கிறது. அவர்கள் எப்போதும் தங்கள் தொழில் வாழ்க்கையில் தங்களை மறந்து மிகவும் பிஸியாக இருக்கிறார்கள், சில சமயங்களில் தங்களுக்கு திருமணம் ஆனதை கூட அவர்கள் மறந்துவிடுகிறார்கள். தங்களின் தொழில் வாழ்க்கையின் வெற்றிக்கு முன்னால் தங்கள் துணையை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.

சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் ராஜா போல வாழ வேண்டுமென்று விரும்புபவர்கள். அவர்கள் எப்போதும் கவனத்தின் மையப்புள்ளியாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் மீது அனைவரின் கவனமும் எப்போதும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், மேலும் தங்கள் துணை அவர்களை அதிலிருந்து விலக்கித் தள்ளும்போது அவர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் தாழ்வுமனப்பான்மையுடன் உணர வைக்கிறார்கள், மேலும் அவர்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறார்கள் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் நேசத்தையும், காதலையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்குள் இருக்காது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு உறவில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற தேவை என்பது மிகவும் அவசியமானது, அது அவர்களின் உறவை முற்றிலுமாக அழிக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் கூட, அவர்கள் அதிகாரத்தை இழக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை அவர்களின் விருப்பத்தின் படி ஆடும் பொம்மை போல நடத்த விரும்புகிறார்கள், இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரக்கூடும். தங்கள் துணை என்ன உணருவார் என்பதைப் பற்றி அவர்கள் ஒரு நொடி கூட யோசிக்க மாட்டார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion