Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
40 வயதுக்கு பின் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவருக்கு வாழ்க்கையில் எப்போது அதிர்ஷ்டம் வருமென்று யாராலும் கணிக்க முடியாது. சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே அதிர்ஷ்டம் வந்து விடும், அதனால் அவர்கள் 20 வயதுகளிலேயே மிகவும் மகிழ்ச்சியான மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் 40 வயதுக்கு மேல்தான் வரும். அவர்களின் வாழ்க்கையே 40 வயதுக்குப் பிறகுதான் தொடங்கும்.
ஜோதிடத்தின்படி, உச்சகட்ட அதிர்ஷ்டம், தவிர்க்க முடியாத வசீகரம் மற்றும் மிகவும் தேவையான அமைதி ஆகியவை சில ராசிக்காரர்களுக்கு அவர்களின் பிற்காலங்களில் வந்து சேர்கின்றன. அவர்கள் ஆசைப்பட்ட ஆடம்பர வாழ்க்கையை அவர்கள் 40 வயதுக்கு பிறகுதான் வாழத் தொடங்குவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் 40 வயதுக்குப் பிறகு ராஜவாழ்க்கை வாழ்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 40 வயதுக்கு பிறகுதான் ராஜயோகம் வர வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் 20 மற்றும் 30 வயதுகள் அவர்களுக்கு கடினமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஆதரவும் ஊக்கமும், குறைவாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் 40 வயதை அடைந்தவுடன், வாழ்க்கையில் ஒரு சிறந்த நிலையை அடைவார்கள் என்றும், அப்போது அவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தை அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் திறமையும், புத்திக்கூர்மையும் அவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை அடைய உதவும். வாழ்க்கையில் இந்த நிலையை அடைவது, பல தசாப்தங்களாக அவர்களிடம் இல்லாத தெளிவை அவர்களுக்கு அளிக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்களாகவும், இலட்சியம் சார்ந்தவர்களாகவும் கருதப்பட்டாலும் வாழ்க்கையின் பிற்பாதியில்தான் அவர்கள் பிரகாசிப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. மகர ராசிக்காரர்களுக்கு, வாழ்க்கையின் வசீகரமும் உற்சாகமும் அவர்களின் 40 வயதில்தான் காத்திருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் தங்கள் 20 வயதிலேயே கடின உழைப்பைத் தொடங்கி விடுவார்கள், அதற்கான பலன்களைப் பெறும் நேரம் 40 வயதுக்குப் பிறகுதான் வரும். அதுவரை பெற்ற அனுபவம், அதிகாரம் மற்றும் தொழில் திறமையுடன், அவர்கள் தங்கள் 40 வயதை அடையும்போது வாழ்க்கையில் ஒரு முற்றிலும் புதிய நிலையை அடைவார்கள்.
ரிஷபம்
செல்வத்தின் அதிபதியான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள், ஸ்திரத்தன்மை, பொறுமை மற்றும் வாழ்க்கையின் சிறந்த விஷயங்கள் மீதான அன்பு ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற வர்கள். நிலையற்ற போக்குகளைப் பின்தொடரும் மற்ற ராசிகளைப் போலலம்மால், ரிஷப ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் திட்டமிட்டு, நிதானமான அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள்.
விரைவாகப் பணக்காரராகும் திட்டங்களை விட, மெதுவான, நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளையே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் இளமைப் பருவம் பெரும்பாலும் சொத்துக்களை சம்பாதிப்பதிலேயே கழிகிறது. அவர்கள் தங்கள் 40 வயதை அடையும்போது, அவர்களின் ஆடம்பர வாழ்க்கைத் தொடங்கும். அவர்களின் விடாமுயற்சி, அவர்களுடைய சேமிப்பை ஒரு வலிமைமிக்க செல்வமாக மாற்றுகிறது. ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் செல்வத்தை ஒரு திடமான, அசைக்க முடியாத கோட்டையைப் போல உருவாக்குகிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் தீவிரத்தன்மை, சமயோசித புத்தி மற்றும் அபாரமான மீள்திறனுக்காக பெயர் பெற்றவர்கள். மாற்றம் மற்றும் சக்திக்குரிய கிரகமான புளூட்டோவால் ஆளப்படுவதால், அவர்கள் சவால்களை எதிர்கொள்வதிலும், அவற்றிலிருந்து மேலும் வலிமையுடன் வெளிவருவதிலும் கைதேர்ந்தவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் சவால்களையும், பொருளாதார சிக்கல்களையும் சந்திப்பார்கள், ஆனால் ஒவ்வொரு அனுபவமும் அவர்களுக்கு சக்தி, கட்டுப்பாடு மற்றும் வியூகம் பற்றிய அனுபவங்களைக் கொடுக்கிறது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 40 வயதிற்குப் பிறகு நிகரற்ற உள்ளுணர்வையும், செல்வம் ஈட்டுவதில் அச்சமற்ற அணுகுமுறையையும் வழங்குகிறது. அவர்கள் லாபகரமான வாய்ப்புகளைக் கண்டறிவதிலும், துணிச்சலான முதலீடுகளைச் செய்வதிலும், தங்களின் சக்திவாய்ந்த தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்வதிலும் 40 வயதுக்குப் பிறகு வல்லவர்களாக மாறுவார்கள். பின்னடைவுகளில் இருந்து மீண்டு வரும் அவர்களின் திறனும், மன உறுதியும் அவர்களை பிற்காலத்தில் கோடீஸ்வரராக மாற்றுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












