Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த 4 ராசிகளில் பிறந்தவங்க ரொம்ப பொறுப்பானவர்களாக இருப்பார்களாம்... இவங்க எப்பவும் கடமை தவறவே மாட்டாங்க...!
ஒருவரின் வெற்றி மற்றும் நம்பகத்தன்மைக்கு மிகவும் அடிப்படையாக இருக்கும் குணங்களில் ஒன்று அவர்களின் பொறுப்புணர்வு. தங்கள் பொறுப்புகளிலிருந்து ஒருபோதும் விலகாத கடமைகளை நிறைவேற்றும் ஒருவர் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவராக இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் பொறுப்புணர்வு அவர்களுக்கு நற்பெயரையும், செல்வத்தையும் பெற்றுத்தரும். ஆனால் அனைவரிடமும் இந்த பொறுப்புணர்வு இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிகளில் பிறந்தவர்கள் வலுவான பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். இது அவர்களை தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அவர்களை வெற்றிகரமானவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் மாற்றும். இந்த பதிவில் எந்தெந்ந ராசிக்காரர்கள் வலிமையான பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வலுவான பொறுப்புணர்வுக்கும், அசைக்க முடியாத மனஉறுதிக்கும் பெயர் பெற்றவர்கள். அன்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் உறுதியானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள். அவர்கள் சந்திக்கும் சவால்களைப் பொருட்படுத்தாமல், தங்கள் இலக்குகள் மற்றும் பொறுப்புகளில் உறுதியாக இருக்கும் குணத்திற்காக பெயர் பெற்றவர்கள்.
அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் தங்கள் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்களாக இருப்பார்கள். அவர்கள் நம்பகமான குழு உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்களின் தொழில் வாழ்க்கைப் போலவே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். இது அவர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தின் மிகவும் அக்கறையான மற்றும் பொறுப்பான ராசியாக அறியப்படுகிறார்கள். குறிப்பாக தங்களின் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பானவர்களாக கருதப்படுகிறார்கள். சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள், தங்கள் குடும்பத்தை கடுமையாக பாதுகாக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் எப்போதும் வழங்குகிறார்கள்.
கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் பாதுகாவலராக தங்கள் பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், இது அவர்களை அன்பான மற்றும் நம்பகமான பெற்றோராக, உடன்பிறந்தவர்களாக மற்றும் வாழ்க்கைத்துணையாக மாற்றுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் எதார்த்த அணுகுமுறை அவர்களை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. அவர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் தங்கள் இலட்சிய பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டுள்ளனர். மகர ராசிக்காரர்கள் அதிகபட்ச சுய கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள், இதனால் அவர்கள் தங்கள் கடமைகளை நிரைவேற்றுவதை தங்கள் வாழ்க்கையின் அறமாக கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கிறார்கள். தொழில் வாழ்க்கையில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் சக மனிதர்களிடமும், வேளையிலும் உள்ளார்ந்த பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் முற்போக்கான சிந்தனையும், புத்திசாலித்தனமும் அவர்களின் பொறுப்பையும், சுதந்திரத்தையும் சமநிலைப்படுத்த அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. அவர்கள் முன்முயற்சி எடுப்பதற்கும் கடினமான பணிகளை ஏற்றுக்கொள்வதற்கும் ஒருபோதும் பயப்படுவதில்லை. வாழ்க்கையைப் பற்றிய கும்ப ராசிக்காரர்களின் அறிவுசார்ந்த மற்றும் மனிதாபிமானமிக்க அணுகுமுறை அவர்களை அனைத்து விஷயங்களிலும் பொறுப்பேற்றுக் கொண்டு அதை நிறைவேற்ற அனுமதிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
