Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த மாதிரி மைசூர் ஸ்டைலில் முட்டை குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
அக்டோபர் 31, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
குரு-செவ்வாய் சிம்ம ராசியில் இணைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த 5 செடிகளை வாங்கி வையுங்க.. வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்! -
மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்க உண்மையை மட்டுமே பேசும் ரொம்ப நேர்மையானவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நேர்மை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு சிறப்பான குணமாகும். வாழ்க்கையில் உண்மையான வெற்றியையும், நிம்மதியையும் அடைய வேண்டுமெனில் ஒருவரிடம் இந்த குணம் அவசியம் இருக்க வேண்டும். அடிப்படை குணமாக இருக்க வேண்டியது இது இப்போது அபூர்வ குணமாக மாறிவிட்டது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். சில ராசிக்காரர்கள் உண்மையைப் பேச பயப்படுவதில்லை, அது விரும்பத்தகாததாகவோ அல்லது சங்கடமாகவோ இருந்தாலும் கூட. அவர்கள் தங்கள் எண்ணங்களை ஒருபோதும் மறைக்க மாட்டார்கள், மற்றவர்களின் கருத்துக்களுக்கு எதிராகச் சென்றாலும் கூட, தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த எப்போதும் பயப்பட மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் வெளிப்படையான மற்றும் நேர்மையான ராசிகளில் முதலிடத்தில் இருப்பார்கள். அவர்கள் எந்த விஷயத்தையும் மறைக்க விரும்ப மாட்டார்கள், எப்போதும் தங்கள் எண்ணங்களை நேரடியாக, எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படுத்துவார்கள்.
சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்ல பயப்படாததால், அவர்களின் நேர்மை மற்றவர்களுக்கு சில சமயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும சமாளிக்க தயாராக இருப்பார்கள். தங்கள் நேர்மையை காப்பாற்ற எந்த விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமைத்துவ பண்புகள் கொண்டவர்கள், அவர்களின் நேர்மை பெரும்பாலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உண்மையைச் சொல்ல பயப்படுவதில்லை, ஏனெனில் அவர்களின் நேர்மை மற்றும் வெளிப்படையானத் தன்மை மட்டுமே விரும்பிய முடிவை அடைய உதவும் என்று நம்புகிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக தங்கள் கருத்துக்களை மறைக்க மாட்டார்கள், மற்றவர்களைப் காக்கா பிடிக்க முயற்சிக்க மாட்டார்கள். அது மோதல்களுக்கு வழிவகுத்தாலும் கூட, அவர்கள் தங்கள் நேர்மையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் பர்பெக்ட்டாக இருப்பவர்களாகவும், விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அனைத்து விஷயங்களும் தெளிவாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பெரும்பாலும் உண்மையைப் பேசுவார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், எனவே அவர்கள் தங்கள் நேர்மையில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருந்தாலும், அவர்களின் நேர்மை எப்போதும் உண்மையுடன் தொடர்புடையது. மற்றவர்களை சந்தோஷப்படுத்த பொய் சொல்லும் பழக்கம் அவர்களுக்கு எப்போதும் இருக்காது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உறுதியான மற்றும் நேர்மையான நபர்களாக இருப்பார்கள். கேட்க கடினமாக இருந்தாலும் சரி, வேதனையாக இருந்தாலும் சரி, உண்மையைப் பேச அவர்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை. விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆழமான மற்றும் உண்மையான உறவுகளைத் தேடுகிறார்கள். அவர்கள் தங்கள் உறவிலும் நேர்மையாக இருப்பார்கள், அது விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுத்தாலும் கூட. எந்தவொரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவிற்கும் உண்மைதான் அடித்தளம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

