Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
இந்த 4 ராசிக்காரங்க மூளையே இல்லாத அடிமுட்டாளாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் சில பலமும், சில பலவீனங்களும் இருக்கும். சில ராசிக்காரர்களிடம் பல சிறப்பான குணங்கள் இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் ஒரேயொரு மோசமான குணம் அவர்களின் அனைத்து நல்ல குணங்களால் ஏற்படும் பலன்களையும் கெடுத்துவிடும். அப்படித்தான் சில ராசிக்காரர்கள் அவர்களிடம் இருக்கும் ஒரு மோசமான குணத்தால் சமூகத்தில் முட்டாளாக பார்க்கப்படுவார்கள்.
அவர்கள் முட்டாளாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களின் செயல்பாடுகள் அவர்களை முட்டாளாக காட்டக்கூடும். அவர்களின் முட்டாள்த்தனம் எந்த விதத்தில் வேண்டுமென்றாலும் வெளிப்படலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் முட்டாள்தனமான செயல்களை செய்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனமே அவர்களின் ஈகோதான். சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தையும், ஆதிக்கத்தையும் எளிதில் ஈர்க்கிறார்கள். அவர்கள் அதிகாரத்தின் மீதும், கவனத்தின் மீதும் வெறித்தனமாக இருப்பதால், அவர்களின் நடத்தை முட்டாள்தனமாகவும், நெறிமுறையற்றதாகவும் இருக்கும்.
அதிகார போதையில், அவர்கள் பல முட்டாள்தனமான, செயல்களைச் செய்வார்கள். இந்த செயல்கள் பயனற்றதாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கும். அவர்களின் சுயநல மனப்பான்மை அவர்களின் மனதை மூடுகிறது, மேலும் அவர்களிடம் ஈகோ அதிகமாக இருந்தால், அவர்கள் சில சமயங்களில் மந்தமாக செயல்படுவார்கள். அவர்களின் தற்பெருமையும் அவர்களை முட்டாள்தனமான ராசிகளில் ஒன்றாக மாற்றுகிறது,
கடகம்
கடக ராசிக்காரர்களின் முட்டாள்தனத்துக்கு காரணமாக இருப்பது அவர்களின் அதிகமாக சிந்திக்கும் திறன் ஆகும். அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படுபவர்கள், எனவே அவர்களை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களின் உணர்ச்சிகள் அவர்களின் மூளையை மழுங்கச் செய்கின்றன.
அவர்களின் குழப்பமான செயல்பாடுகள் அவர்களை எந்தவொரு விஷயத்தையும் செய்வதை தாமதமாக்குகிறது. அவர்களின் உணர்வுகள் அவர்களின் பலமாக இருக்கலாம், அதேசமயம் அவர்களின் பலவீனமும் அதுதான். அவர்கள் எப்போது பகுத்தறிவுடன் செயல்படுகிறார்களோ அப்போதுதான் அவர்களின் வெற்றிக்கான கதவு திறக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் பிடிவாதமான மனநிலையும், ஆக்ரோஷமான நடத்தையும் எந்தவொரு சூழ்நிலையையும் திறமையுடனும், பொறுமையுடனும் கையாள அனுமதிக்காது. சூழ்நிலைகளின் தீவிரத்தை அவர்கள் எப்போதும் உணர்வதில்லை. அதனால் அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க அனைவரும் தயங்குவார்கள். அவர்களின் பைத்தியக்காரத்தனமான செயல்கள் அவர்களின் கடமைகளை செய்வதை கடினமாக்குகிறது. அவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து சரியாக செயல்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வேண்டுமென்றே தவறுகள் செய்யும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல. ஆனால் சூழ்நிலைகளை தைரியத்துடன் எதிர்கொள்ளும் உறுதி இல்லாதது அவர்களின் ஆளுமையின் மிகப்பெரிய குறைபாடாகும். அனைவரையும் நல்லவர்களாக பார்க்கும் அவர்களின் சமநிலையான அணுகுமுறை அவர்களுடைய பகுத்தறிவை மறைக்கிறது. அவர்களின் இந்த கண்ணோட்டம் அவர்களை வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் அடைய விடாமல் தடுக்கிறது. பயம் மற்றும் குற்ற உணர்வு காரணமாக அவர்களால் பல்வேறு முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












