Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம்
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மே 02-ஆம் தேதி சனிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதி விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்கவும். வியாபார முயற்சிகளில் உங்கள் அணுகுமுறை சாதகமாக இருக்கும். இருப்பினும், சில பணிகளில் சில தடைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் அவர்களின் மனச்சுமைகளிலிருந்து விடுபடுவார்கள். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். இன்று உங்களின் சிவப்பு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று துரதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பணிச்சுமை அதிகரிப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள், அது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சட்ட சிக்கல்கள் ஏற்பட்டால், அனுபவம் வாய்ந்த நபர்களிடம் ஆலோசனை பெறவும். மற்றவர்களுக்கு உதவுவதால் உங்கள் வேலைகள் முடிக்கப்படாமல் போகலாம். பச்சை இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களிடம் பல பணிகள் ஒப்படைக்கப்படுவதால் பதற்றம் ஏற்படும். இருப்பினும், உங்கள் அனைத்து வேலைகளையும் நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒரு சுப நிகழ்வு ஏற்பாடு செய்யப்படலாம். ஆன்மீக நடவடிக்கைகளில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று இன்று நிறைவேறலாம். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கலவையான பலன்களைத் தரும். காதல் உறவில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சக ஊழியர் உங்களுக்கு எதிராக தீங்கு செய்ய முயற்சிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் ஒரு கடை, தொழிற்சாலை அல்லது சொத்தை வாங்க அல்லது விற்க திட்டமிட்டால், அதற்கான ஆவணங்களில் முழுமையான கவனம் செலுத்துங்கள். உங்கள் முயற்சிகளில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை முழுமையாக ஆதரிப்பார். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
சிம்மம்
இன்று சில ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மறக்காதீர்கள். மேலும், உங்கள் தொழில் வாழ்க்கையில் சவால்கள் எழக்கூடும். சொத்து தொடர்பான குடும்ப தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது, இதில் கவனமாக செயல்பட வேண்டும். இருப்பினும், இந்த நாள் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் போராட்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல், உங்கள் கடின உழைப்பை நம்பி உங்கள் பணிகளைத் தொடருங்கள். புதிய இடத்திலிருந்து உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம், ஆனால் உங்கள் தற்போதைய வேலையிலேயே தங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பணிகளில் தீவிர கவனம் செலுத்துவீர்கள் மற்றும் அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் தெளிவாகவும் லாஜிக்காகவும் இருக்கும், இது எந்த சவாலையும் நீங்கள் எளிதாக எதிர்கொள்ள உதவும். இன்று தனிப்பட்ட உறவுகளில் நீங்கள் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த நாளை எதிர்பார்க்கலாம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தள்ளிப் போடுவது நல்லது, ஏனெனில் இது பணியிட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தொழில் முயற்சிகளும் தடைகளை சந்திக்க நேரிடலாம், வேலையில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
தனுசு
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும், நண்பர்களுடன் உற்சாகமான பயணத்தைத் தொடங்க அல்லது புதிய முதலீடுகளை செய்ய இது சிறந்த நாள். நேர்மறையான வணிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் புதிய ஆட்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்க்கவும். அமைதியான நாளை உறுதிசெய்ய உங்கள் உணர்ச்சிகளையும் வார்த்தைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மகரம்
இன்று மகர ராசிக்காரர்களுக்கு மோசமான நாளாக இருக்கும். உடல்நலப் பிரச்சினைகள் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும், அதே நேரத்தில் வணிக முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். எதிரிகளின் கை ஓங்க வாய்ப்புள்ளதால் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்திற்குள் பதட்டங்கள் அதிகரிக்கலாம், உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், இது உங்கள் உறவுகளை சோதிக்கலாம். சவால்களை சமாளிக்க மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
கும்பம்
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வேலை அல்லது தொழில் நிமித்தம் காரணமாக நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், எனவே இந்த பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வெளிப்படையான தொடர்பை பராமரிக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கிரகங்களின் நிலை சாதகமாக உள்ளது. உங்கள் நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிட்டு விடாதீர்கள். பணியிடத்தில் கடினமான பணிகளையும் உங்கள் மன உறுதியின் துணையால் செய்து முடிப்பீர்கள். நீங்கள் ஏதேனும் மூலதன முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இன்றைய நாள் அதற்கு ஏற்ற நாளாக இருக்கும். திடீரென்று உறவினர் வீட்டிற்கு செல்ல நேரிடலாம். குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் உடல்நிலை குறித்து சிறிது கவலைகள் ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications