Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
Today Rasi Palan 27 January 2025: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ஒரு கலவையான நாளை எதிர்பார்க்கலாம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே கவனமாக இருக்கவும். புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தள்ளிப் போடுவது நல்லது, ஏனெனில் இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தொழில் முயற்சிகளும் தடைகளை சந்திக்க நேரிடலாம், வேலையில் இருப்பவர்களும் இன்று அலுவலகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
ரிஷபம்
ரிஷப ராசிக்கார்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான நாளாக இருக்கும். உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பிஸியான நாளாக இருந்தாலும், உங்கள் கடமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க மறக்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய வாகனம் வாங்குவதற்கு இன்று வேலைகள் தொடங்கப்படலாம். பேச்சு மற்றும் நடத்தை காரணமாக சுற்றியிருப்பவர்கள் உங்களுடன் நட்பு கொள்ள முயற்சிப்பார்கள். அதிக வேலை காரணமாக உடல் சோர்வுடன் இருப்பீர்கள். எனவே தேவையான ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வணிகர்களுக்கு லாபம் தரும் நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். மனதில் உள்ளதை தந்தையிடம் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
சிம்மம்
இன்று சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் சவாலான ஒரு நாளை எதிர்பார்க்கலாம். உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் கொடுத்து தீர்ப்பது முக்கியம். உங்கள் கண்ணியமான பேச்சு உங்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும். வெளிநாட்டில் வசிப்பவர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இது ஒரு நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கலாம், ஆனால் பருவகால நோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க மறக்காதீர்கள். ஒரு புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உருவாகலாம் அல்லது ஒரு மங்களகரமான குடும்ப நிகழ்வுக்கான பணிகள் தொடங்கப்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிதிரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்களது ஏதேனும் வேலை பணத்தால் நிலுவையில் இருந்தால், இன்று அது முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டுக்காக ஒரு புதிய பொருளை வாங்கலாம். எதற்கும் தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதிரீதியாக நல்ல நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இன்று அதிலிருந்து விடுபடுவீர்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஒரு நேர்மறையான நாளை அனுபவிக்கலாம். உங்கள் மனஅமைதியை பாதுகாக்க கோவிலுக்குச் செல்லுங்கள். ஒரு விசேஷமான நபருடனான சந்திப்பு எதிர்கால நன்மைகளைத் தரும். புதிய வணிக முயற்சிகள் தொடங்கப்படலாம், மேலும் ஒரு பெரிய ஒப்பந்தம் தேடியும் வரலாம். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவை வழங்குவார்கள் மற்றும் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்குவார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். புதிய நபர்களின் நட்புகளால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், அது இன்று சரியாகும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து எதையும் ரகசியமாக வைத்துக் கொள்ளாதீர்கள், இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே சண்டை வர வாய்ப்புள்ளது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பரபரப்பான நாளை அனுபவிப்பார்கள். எனவே எந்த காரியத்தையும் பதட்டமாக செய்யாதீர்கள். இன்று தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது, குடும்ப விஷயங்களை அந்நியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிதி விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்கவும். வியாபார முயற்சிகளில் உங்கள் மனைவியின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், சில பணிகளில் சில தடைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் அவர்களின் மனச்சுமைகளிலிருந்து விடுபடுவார்கள். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். இன்று உங்களின் நீலம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











