Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
Today Rasi Palan 23 September 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.15-7.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும். அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்திற்காக புதிய திட்டங்களை தீட்ட வேண்டியிருக்கும். எந்த ஆவணங்களையும் கையெழுத்திடும் போது அவசரப்பட வேண்டாம். நீங்கள் அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிபவராக இருந்தால், மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அதிக கோபம் கொள்வது உங்களுக்கு நல்லதல்ல.
உங்கள் மீதான குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரவு நீண்ட நேரம் வரை விழித்திருப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் தற்போதைய வேலைகளில் சில தடை ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் பிடிவாத குணம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். தேவைக்கு அதிகமாக கண்டிப்புடன் நடந்து கொள்ளாதீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு செல்வாக்கு மிக்க நபரின் வழிகாட்டுதல் கிடைக்கும். உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், திட்டமிட்டபடி வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். அவசரப்படுவதைத் தவிர்க்கவும். வீட்டில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க சாதுர்யமாக செயல்பட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:25 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நிலுவையில் உள்ள வேலைகளின் பட்டியல் அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்களுக்கிடையே இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். தொழிலதிபர்களுக்கு வியாபாரத்தில் புதிய சவால்கள் இருக்கும். முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. உத்தியோகஸ்தர்களின் பணி பெரிதும் பாராட்டப்படும். காதல் வாழ்க்கையில் மனஅழுத்தம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, பண விஷயங்களில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். தேவைக்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். வேலை சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணம் வெற்றியடையும். உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். தொழிலதிபர்களின் வேலை சம்பந்தமான எந்த பிரச்சனையும் தீரும். அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் நிதி நிலை மேம்படும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, தேவையற்ற கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் திறன்களின் மீது நம்பிக்கை வையுங்கள். அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில், நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க சிலரை நீங்கள் சந்திக்கலாம். உங்களின் இந்த சந்திப்பு எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழிலதிபர்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அனைத்து தகவல்களையும் சரியாகப் பெறுங்கள். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் உள்ள பணிகளை அதிகரிக்க விட வேண்டாம். காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். எதிர்மறை உணர்வு உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். அதிக கவலை உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில மறக்க முடியா சம்பவங்கள் நடக்கலாம். அது உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும். மாணவர்களுக்கு இன்று அனுகூலமான நாள். தொழிலதிபர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உங்கள் கவனக்குறைவால் கிடைத்த வாய்ப்பை இழக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடினமான பணிகளை மிக கவனமாக செய்து முடிக்க முயற்சியுங்கள். சிறு தவறு செய்தாலும் அது உங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நடந்து வரும் சச்சரவை பேசி தீர்க்க முயற்சிக்கவும். உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 8:55 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்க திட்டமிட்டால், உங்கள் திட்டம் முன்னேறும். பண விஷயத்தில் இன்று சாதாரண நாளாக இருக்கும். வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையில் சமநிலையைப் பராமரிக்கவும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரையும் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் பணி பெரிதும் பாராட்டப்படும். இன்று உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளும் கிடைக்கலாம். வேலையுடன் குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் தேவை. ஒருவருக்கு ஒருவர் மீதான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலியால் சிரமப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். ஆனால், உங்கள் எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் முடிவடையும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சில விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவீர்கள். வணிகக் கண்ணோட்டத்தில் இன்று மிகவும் சிறப்பாக அமையாது. இன்று எந்தவொரு புதிய வேலையும் செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் அதிக கவனம் செலுத்துங்கள். நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7:30 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, ஆன்மீக விஷயங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் நீங்கள் நன்றாக உணர்வீர்கள். பணம் சம்பந்தமான எந்த வேலையும் முடிவடையும். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. உறவுகளில் ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்கள் உணர்ச்சி ரீதியான இணைப்பு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் கடன் பரிவர்த்தனைகள் செய்வது இன்று சரியாக இருக்காது. இது எதிர்காலத்தில் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். உத்தியோகமஸ்தர்கள் தங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் செய்வீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், திருமணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி, நம்பிக்கையுடன் இருக்க உங்களை ஊக்குவிக்கவும். நீங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், உங்கள் நிதி நிலை வெகுவாகக் குறையக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கசப்பான மற்றும் இனிமையான வாக்குவாதங்கள் இருக்கலாம். நீங்கள் கூட்டாக வியாபாரம் செய்து, உங்கள் கூட்டாளருடனான பிரச்சனையைப் புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களின் பணியில் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்களில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் நன்மையை மட்டுமே விரும்புகிறார்கள். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சாப்பிடுவதிலும், குடிப்பதிலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 10 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், நீங்கள் மிகவும் ஏமாற்றமடையலாம். இதை நினைத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக, உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, புதிதாக தொடங்க முயற்சி செய்யுங்கள். தாயாரின் அனுகூலத்தால் நிதி பலன்கள் உண்டாகக்கூடும். வியாபாரிகளுக்கு போட்டி மனப்பான்மை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அதீத நம்பிக்கையைத் தவிர்த்து, உங்கள் தவறுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் காதல் துணை உங்களை ஊக்குவிப்பார். உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 8:20 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் மனம் குழப்பமாகவே இருக்கும். மேலும், நீங்கள் நிறைய அலைய வேண்டியிருக்கும். உங்களைப் புத்துணர்ச்சியாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க, தினமும் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம். நிதி நிலைமை மோசமடையலாம். நீங்கள் ஒருவரிடமிருந்து நிதி உதவி பெற வேண்டியிருக்கும். வணிகர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காவிட்டால், நீங்கள் மிகவும் ஏமாற்றமடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். சக ஊழியர் விடுப்பில் செல்வதால் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உடலின் எந்தப் பகுதியிலும் வலியால் அவதியுறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











