Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
Today Rasi Palan 20 மே 2025: இன்று இந்த 4 ராசிக்காரங்க கவனமா இல்லனா பெரிய ஆபத்தை சந்திப்பாங்களாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான சூழல் பொறுமையைச் சோதிக்கும், நெருங்கிய உறவினறால் பண இழப்பு ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன் ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது இழப்புகளைத் தடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் சில மோதல்கள் ஏற்படக்கூடும். நீங்கள் விஷயங்களை விவேகத்துடன் கையாளாவிட்டால் பதட்டம் அதிகரிக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் ஏற்படும். சிறிய விஷயங்களுக்காக கோபப்படுவதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் நல்ல புரிதலைக் கொண்டிருப்பார்கள், அவர்கள் ஒன்றாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்க திட்டமிடுவார்கள். உங்கள் உடன்பிறப்புகளுடன் முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அமைதியானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். தூரத்து உறவினரிடமிருந்து ஏமாற்றமளிக்கும் செய்திகளைப் பெறலாம். உங்கள் துணையின் முயற்சிகள் வெற்றி அடைவதால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் கலவையான பலன்களைத் தரும். கடந்த கால முடிவைப் பற்றி நீங்கள் வருத்தப்படலாம். குடும்ப உறுப்பினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். நிதி திட்டமிடல் அவசியம். ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள்வது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். உணர்ச்சிகளின் அடிப்படையில் எந்த வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தொழிலில் சில நிதி இழப்புகள் ஏற்படக்கூடும், இது உங்கள் ஒட்டுமொத்த பொருளாதார நிலையைப் பாதிக்கும். பணக் கவலைகள் காரணமாக சில முக்கியமான வேலைகள் நிறுத்தப்படலாம், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். நீங்கள் ஒரு குறுகிய பயணத்தைத் திட்டமிடலாம், அது பலனளிப்பதாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ச நிறம் மஞ்சள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும், ஆனால் உங்கள் உடல்நலத்தை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிடலாம். உங்கள் துணைக்கு ஒரு ஆச்சரிய பரிசை வாங்கலாம், இது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் தீர்க்க உதவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடவும், சிறப்பான உணவை உண்ணவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் நற்பெயர் மற்றும் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுப்பதற்கு முன்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
விருச்சிகம்
இன்று விருச்சிக ராசிக்காரர்களின் மரியாதை மற்றும் நற்பெயர் அதிகரிக்கும். உங்கள் பணிகளை தள்ளிபோடுவதைத் தவிர்க்கவும். சட்ட போராட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலத்தில் வராமல் இருந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆடம்பரம் மற்றும் பொழுதுபோக்குக்காக குறிப்பிட்ட தொகையை செலவிடுவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க தங்கள் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். இன்று அவர்களின் புகழ் அதிகரிக்கும், மேலும் உங்கள் பணியிடத்தில் பாராட்டுக்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், உங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டும். நீங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க திட்டமிடலாம், நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பழைய நண்பரை சந்திக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். சில புதிய தகராறுகள் ஏற்படக்கூடும், ஆனால் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் வெற்றிக்கான பாதையில் உள்ள தடைகள் நீங்கும், மேலும் உங்கள் நிதி நிலைமை மேம்படும். உங்களின் கவலையை அதிகரித்து வந்த பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும். குடும்ப வாழ்வில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினரின் வருகையால் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு, இன்று தன்னிறைவான நாளாக இருக்கும். வேலை தேடுபவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். மற்றவர்களுடன் உங்களைப் பற்றிய முக்கியமான தகவலையும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு செல்லலாம். உங்கள் தொழிலில் சில புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவீர்கள், இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications