Today Rasi Palan 20 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பதை தவிர்க்கணும்..

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 20 December 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 13.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-13.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று குடும்ப விஷயங்களில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது ஈகோவை கொண்டு வராதீர்கள். உங்களின் வேலைகளை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுத்தால், அது பிரச்சனைகளை உண்டாக்கலாம். நிதி விஷயங்களில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். மூன்றாம் நபரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மாணவர்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். நல்ல பெயரை இன்று சம்பாதிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்தால், அந்த வேலையை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். பரம்பரை சொத்துக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். வேலையில் சில இடையூறுகள் ஏற்படுவதால் கவலைப்படுவீர்கள். தொண்டையில் பிரச்சனைகளை சந்திக்கலாம். பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அற்றது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று நல்ல நாளாக இருக்கும். எந்த ரிஸ்க்கையும் நன்கு சிந்தித்து எடுக்க வேண்டும். எந்த முதலீட்டையும் சிந்தனையுடன் செய்ய வேண்டும். அதிக வேலை காரணமாக எரிச்சலுடன் இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம், இல்லையெனில் அது உங்கள் உறவை பாதிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வணிகத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், அது உங்களுக்குப் பின்னர் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். பிறர் விஷயத்தை தேவையில்லாமல் பேசாதீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது கோபம் கொள்ளக்கூடும். கடன் வாங்கியிருந்தால், அதை நீங்கள் இன்று திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று மூன்றாம் நபரைப் பற்றி தேவையில்லாமல் பேசாதீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் இன்று வெற்றிகரமாக முடிக்கப்படலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்களின் வேலையை தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மூன்றாம் நபரை நம்பினால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இன்று அதிலிருந்து விடுபடுவீர்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் வேலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பரம்பரை சொத்துக்களைப் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று பணம் தொடர்பான விஷயங்களில் நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்ல திட்டமிடலாம். ஆக்கப்பூர்வமான வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வானிலை உங்கள் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, December 20, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion