Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
Today Rasi Palan 16 July 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதே நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 3.00-4.30 மணி வரை. குளிகை காலை 12.00-1.30 மணி வரை. எமகண்டம் காலை 9.00-10.30 மணி வரை. சூலம் - வடக்கு திசை. பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, தவறான நபர்களின் சகவாசத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உணர்ச்சிகளால் மூழ்கி முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். வெளி நபர்களை அதிகமாக நம்ப வேண்டாம். தொழிலதிபர்கள் சிந்தனையுடன் வணிகத் திட்டத்தை உருவாக்குங்கள். முதலீடுகள் போன்றவற்றைச் செய்வதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. உத்தியோகஸ்தர்கள் அலுவலக விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வீட்டிற்கு விருந்தினர்களின் திடீர் வருகை இருக்கக்கூடும். அதனால், வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, உங்கள் தினசரி வழக்கத்தையும் ஆரோக்கியமான உணவைகளை சேர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறலாம். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்பு கிடைக்கும். விரைவில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பு பலன் தரும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடன் நட்புடன் இருங்கள். உங்கள் கண்டிப்பான அணுகுமுறை அவர்களிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் அன்புக்குரியவரின் மகிழ்ச்சியை முழுமையாக கவனித்துக்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். கணக்கியல் முறைகேடுகளால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்களின் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வியாபார விஷயங்களில் தடைகள் இருக்கலாம். ஆனால், இந்த பிரச்சனை விரைவில் விலகும். நீங்கள் தற்போதைய வேலையை மாற்றத் திட்டமிட்டிருந்தால், புதிய வேலையைத் தேடுவதற்கான நேரம் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை நிலவும். காதல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணை மிகவும் தனிமையாக உணருவார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, பாதகமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கோபம் மற்றும் ஈகோ போன்ற எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து விலகி இருங்கள். வெற்றியை அடைய நீங்கள் கடினமாக உழைத்தால், அதைத் தொடருங்கள். விரைவில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் பேராசையால் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் லாபத்திற்குப் பதிலாக நஷ்டத்தையே சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். வீட்டில் திடீர் சச்சரவுகள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். அதிக அழுத்தத்தை உணர்வீர்கள்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலின் எந்தப் பகுதியிலும் வலியால் அவதியுறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்களின் நிதி சார்ந்த திட்டமிடல் வெற்றியடைந்து, உங்கள் நிதி நிலைமை மேம்படும். மாணவர்களுக்கு இது சாதகமான நேரம். குறிப்பாக வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழிலதிபர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது. நீங்கள் உங்கள் குடும்பத் தொழிலுடன் தொடர்புடையவராக இருந்தால், உங்கள் தந்தையின் அறிவுரை உங்களுக்குப் பயனளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் கவனக்குறைவால் பெரும் நஷ்டம் ஏற்படலாம். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். திருமண வாழ்வில் நிலவும் பதற்றம் குறையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பணிச்சுமை உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். உங்களுக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, கோபமும் ஈகோவும் நிலைமையை மோசமாக்கும். உங்கள் நடத்தை சாதாரணமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் உங்கள் நிதி நிலை மோசமடையலாம். தொழிலதிபர்களுக்கு நிதி பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. புதிய வேலையைத் தொடங்குவதற்கு ஏற்ற நாள் அல்ல. அலுவலகத்தில் வாக்குவாத சூழ்நிலை உருவாகலாம். சண்டைகள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து விலகி இருங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் உங்கள் உறவு வலுவடையும். திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வெளியாட்கள் அதிகம் தலையிட வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கவனக்குறைவு விலை உயர்ந்ததாக இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கலாம். எதிர்காலத்தில் நிதி பரிவர்த்தனைகளை சிந்தனையுடன் செய்யுங்கள்.
தொழிலதிபர்கள் அவசரப்படாமல், கவனமாக முடிவுகளை எடுங்கள். எந்தவொரு வியாபார நடவடிக்கையையும் உங்கள் மேற்பார்வையின் கீழ் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழில் வேகமாக முன்னேறும். இக்கட்டான சூழலில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் நம்பினால் மட்டுமே உங்கள் உறவை பலப்படுத்த முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வானிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:25 மணி முதல் இரவு 9:50 வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு வேலை சம்பந்தமான மன அழுத்தம் இருக்கலாம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். சரியான நேரம் வரும்போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் அவசர அவசரமாக எந்தவொரு ஆவண வேலையையும் செய்ய வேண்டாம். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை உங்களுக்கு அவசியம் தேவை. உத்தியோகஸ்தர்கள் வேலை திறன் அலுவலகத்தில் வேலை செய்வதை எளிதாக்கும்.
குடும்பத்தில் எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்கும்போது மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். காதல் உறவு ஆழமாகும். உங்கள் காதலுக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், நீங்கள் சில தீவிர நோய்களுக்கு இரையாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் நன்றாக இருக்காது. நீங்கள் எதையாவது பற்றி கவலைப்படுவீர்கள். ஆனால், மதியத்திற்குப் பிறகு நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் பிரச்சனை எளிதில் தீரும்.
வணிகர்கள் ஒரு பெரிய முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு இன்று சாதகமான நாள். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு உதவுங்கள். ஆனால், உங்கள் வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப உறவுகளில் மனகசப்பை அதிகமாக வளர விடாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களிடையே அன்பு அதிகரிக்கும்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தவறான உணவுப் பழக்கத்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நிலுவையில் இருந்த முக்கியமான வேலைகளை முடிப்பதன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளையும் பெறலாம். சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சிக்கவும். கோபத்தையும் அவசரத்தையும் தவிர்க்கவும். தொழிலதிபர்களுக்கு புதிய ஆர்டர் கிடைக்கலாம். உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்களின் வருமானம் கூடும். நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெற வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் சில உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். காதல் வாழ்க்கையில் சற்று மனஅழுத்தம் இருக்கும். உங்கள் காதல் உறவைப் பற்றி மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, பரபரப்பான வழக்கத்தின் காரணமாக, உங்களுக்காக நேரத்தைப் பெற முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
வியாபாரிகளே, இன்று உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உங்களின் சில வேலைகள் திடீரென தடைபடலாம். வேலை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலாம். உங்கள் பிரச்சனைகள் நீங்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். எப்போதும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இலக்கு சார்ந்த வேலைகளைச் செய்பவர்கள் தங்கள் வேலையை எளிதாக செய்து முடிப்பார்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால், நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். இன்று உங்கள் தனிப்பட்ட வேலைகளிலும் முழு கவனம் செலுத்த முடியும். தொழிலதிபர்களின் தடைப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முயற்சியுங்கள். திருமண வாழ்க்கையில் சில பழைய நினைவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகமாக கவலைப்படும் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











