Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 11 December 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மோசமா இருக்கும்.. உஷார்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினரின் வருகையால் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மூன்றாம் நபரின் பேச்சால் நீங்கள் மோசமாக உணரலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று பலவீனமான நாளாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் எந்த வேலையையும் மற்றவர்களுக்கு விட்டுகொடுக்காதீர்கள். ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மன அமைதி கிடைக்கும். இன்று சில வேலைகளால் டென்சனாக இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நிறைய செலவுகளை சந்திப்பீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் சிறப்பான செயல்திறனைக் கண்டு உயர் அதிகாரி மகிழ்ச்சி அடைவார். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நிறைய செல்வம் சேரும். சிந்திக்காமல் எந்த வேலையையும் செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் வேலையில் முழு கடின உழைப்பைக் காட்டுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று புதிய வேலைகளைத் தொடங்க சிறந்த நாளாக இருக்கும். உங்களின் நீண்ட கால திட்டங்கள் இன்று நிறைவேறும் வாய்ப்புள்ளது. கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபரின் ஆலோசனையைப் பெற வேண்டாம். இல்லாவிட்டால், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று வரவு செலவுக்கு இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும். செலவுகள் அதிகரிப்பதால் நீங்கள் கவலைப்படுவீர்கள். புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு புதிய வாகனம் வாங்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சட்ட விஷயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். சில வேலைகளில் மிகவும் அவசரப்படுவீர்கள். ஆனால் அதை முடிக்க கஷ்டப்படுவீர்கள். உங்கள் வேலையை மாற்றுவது பற்றி நீங்கள் நினைத்திருந்தால், இன்று விண்ணப்பிக்கலாம். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் உதவியால் வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். வியாபாரத்தில் புதிய திட்டம் தொடங்கலாம். யாராவது உங்களிடம் ஏதாவது மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினால் உங்கள் மனம் கலங்கும். இன்று எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உங்கள் மீதும் மற்ற வேலைகளிலும் கவனம் செலுத்துவீர்கள், இதன் காரணமாக நீங்கள் சோர்வாக உணருவீர்கள். இன்று உங்களுக்கு புதிய எதிரிகள் தோன்றலாம். உங்கள் நம்பிக்கைக்குரியவர் உங்களுக்கு தவறான பாதையைக் காட்டலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று கடந்த கால தவறிலிருந்து நீங்கள் பாடம் கற்க வேண்டும். வியாபாரிகளின் திட்டங்கள் நிறைவேறும். இழந்த பணத்தையும் திரும்பப் பெறலாம். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் சொத்து சம்பந்தமாக ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிக்கப் போகிறீர்கள் என்றால், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று புதிய வேலைகளைத் தொடங்க நல்ல நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் மிகவும் கவனமாக அணுக வேண்டும். குடும்ப பிரச்சனைகளை புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











