Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 05 March 2025: இன்று இந்த ராசிக்காரங்க எதிரிகளிடம் எச்சரிக்கையா இருக்கணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களின் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். எந்த வேலைக்கும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்காது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். எந்த வேலையிலும் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், அது உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் உதவியுடன் தீர்க்கப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று யோசிக்காமல் செலவு செய்வீர்கள். இதனால் உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படும். உங்கள் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க முடியாமல் போகலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். திருமணமான தம்பதிகளிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். காதலிப்பவர்கள் தனது காதலை குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லலாம். உங்கள் கடன்கள் மற்றும் அவற்றை திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைத்தால், நல்ல வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பேச்சிலும் நடத்தையிலும் இனிமையை பராமரிக்க வேண்டும். ஆடம்பரங்களும் வசதிகளும் அதிகரிக்கும். நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஒரு புதிய வாகனத்தை வாங்கலாம். ஆனால் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதலிப்பவர்கள் தங்கள் துணையுடன் மோதலை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். எந்த முடிவையும் கவனமாக யோசித்த பிறகு எடுக்க வேண்டும். சில சிறப்பு நபர்களைச் சந்திப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை புறக்கணிக்காதீர்கள். இன்று சில முதலீட்டில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நல்ல நாளாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆலோசனை தேவைப்படும். தேவையற்ற பணிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்களின் முக்கியமான சில வேலையை ஒத்திவைக்க நேரிடும். இதனால் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலா. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பழைய நண்பரை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களின் திறமையைக் காட்ட வேண்டிய நாளாக இருக்கும். உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இன்று நிறைய ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் சகோதரருடன் வாக்குவாதம் ஏற்படலாம். தொழிலில் சில வேலைகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது நிலுவையில் இருந்து கொண்டே இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று மனதில் பதற்றம் இருக்கும். யாரையும் புண்படுத்தும் எதையும் நீங்கள் சொல்லாதீர்கள். உங்கள் குழந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். வீட்டிற்கு விருந்தினர் வரலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடத்தில் சிக்கல் இருந்தால், அது தீர்க்கப்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று தொழில் ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் சிக்கிய பணம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உங்கள் வேலையை முடிப்பதில் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். இருப்பினும் அந்த வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் இருவரிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பலனைப் பெறுவீர்கள். உங்கள் வேலைக்கு வேறு யாரையும் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். வாகனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க வேண்டிய நாளாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையே பிரச்சனை இருந்தால், அது உரையாடல் மூலம் தீர்க்கப்படும். இன்று வாகனங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











