Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Today Rasi Palan 04 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் பேச்சை கட்டுப்படுத்தணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் மன அழுத்தம் சற்று குறையும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உங்களின் திறமையால் அனைவர் மனதையும் கவர்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அனுபவசாலிகளின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்ப பிரச்சனைகளைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீட்டு பிரச்சனைகளை வீட்டில் உள்ள பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்து சரிசெய்ய முயலுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சற்று குறையலாம். பணியிடத்தில் வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களுக்கு மற்றவர்கள் உதவி புரிவார்கள். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சில நல்ல மாற்றங்களைக் காணலாம். உங்கள் பிள்ளைகளின் நடத்தையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பிள்ளைகளின் திருமணம் குறித்த கவலைகள் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று மற்றவர்களின் பேச்சை நம்பாதீர்கள். அதிக சோம்பேறித்தனத்தால் தொழிலில் பின்தங்கியிருப்பீர்கள். பண விஷயங்களில் மிகவும் கவனக்குறைவாக இருப்பீர்கள். இதன் விளைவாக பெரிய இழப்பையும் சந்திக்கலாம். எனவே இந்த பழக்கத்தை உடனே மாற்றுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் அதிகமாக கோபப்படுவீர்கள். இதனால் மிகவும் டென்சனுடன் எப்போதும் இருப்பீர்கள். இருப்பினும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களின் பிடிவாதம் உங்கள் வேலையை கெடுத்துவிடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் சில நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். நிதி விஷயங்களில் மிகுந்த சரிவை சந்திக்க நேரிடும் என்பதால் பண விஷயத்தில் இன்று சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களின் கோபமான நடத்தை குடும்ப உறுப்பினர்களை உங்களிடம் இருந்து விலக்கி வைக்கும். அலுவலகத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சொத்து பிரச்சனைகள் அப்படியே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கும் அவசர முடிவுகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் நடத்தை உங்களை சங்கடப்படுத்தலாம். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு குறைவாக பேசுங்கள் மற்றும் அதிகமாக வேலை செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications